வைஃபை ஆன் செய்ததும், இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி முதல்வர் ஸ்டாலின் பேரணி சென்ற புகைப்படம் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதைபார்த்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,
“அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். இந்திய நேரப்படி இன்று (மே 10) மாலை 5 மணி முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான அனைத்து வகையான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஒரு வழியாக இந்த போர் பதட்டம் முடிவுக்கு வந்ததாக நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், போர் நிறுத்த முடிவை மீறி மீண்டும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. digital thinnai : mkstalin action against durai murugan
இதற்கிடையே, பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கும் தீவிரவாத தாக்குதல்களுக்கும் எதிராக வீரத்துடன் போர் நடத்திய இந்திய ராணுவத்துக்கு ஒன்றுபட்ட ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது என்று கூறி மெரினா சாலையில் உள்ள காவல் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து போர் நினைவு சின்னம் வரை முன்னாள் படைவீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடன் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு முதல்வர் ஸ்டாலின் பேரணி சென்றார்.

இதுமாதிரியான ஒரு பேரணியை கர்நாடாகாவை தவிர வேறெந்த மாநிலமும் கையிலெடுக்காதபோது ஸ்டாலின் முன்னெடுத்ததற்கான முக்கிய காரணம் என்ன? என்ற கேள்வியும் எழுந்தது. digital thinnai : mkstalin action against durai murugan
ஒருபக்கம் இந்திய ராணுவத்தின் வீரத்தையும் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றுவதற்கும், தேச ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் நடத்தப்பட்டிருந்தாலும், இன்னொருபுறம் மத்திய அரசிற்கும் ஆளுநருக்கும் மற்ற எதிர்க்கட்சிகளுக்கும் ’திமுக பிரிவினைவாத கட்சி அல்ல’ என்பதை நிரூபிப்பதற்காகவே இந்த பேரணி நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது
ஏனென்றால் இதுவரை மத்திய அரசு கொண்டுவரும் பல விஷயங்களுக்கு திமுக எதிராகவே இருந்து வந்தது. அதாவது மும்மொழி கொள்கையை மத்திய அரசு முயற்சி எடுத்தால், இருமொழி கொள்கைதான் இருக்க வேண்டும் என்று எதிர்த்து நிற்பது, தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று எதிர்ப்பது, ஒரே நாடு ஒரே ரேஷன் என்று மத்திய அரசு சொன்னால் தனிநாடு தமிழ்நாடு வேண்டும் என்று சொல்வது, தொகுதி மறுவரையறை என்று மத்திய அரசு கையிலெடுத்தால் இது தென்னிந்தியாவிற்கு எதிரான சூழ்ச்சி என எதிர்ப்பது என மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இவ்வளவு ஏன் மத்திய அரசை கூட இது “மத்திய அரசு” அல்ல இது ஒன்றிய அரசுதான் என்று சொல்லி வருகிறது,
இப்படி திமுக அரசு அனைத்திற்கும் எதிராக செயல்படுவதால் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பல மேடைகளில் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவதைவிட ஒருபடி மேலே சென்று திமுக கட்சியை பிரிவினைவாத கட்சி என்று சொல்லிவந்தார், மோடி கூட ஒருமுறை ஸ்டாலினை, ‘அவர் என்ன இன்னொரு பிரபாகரனா?’ இந்தியாவிலிருந்து அனைத்து விஷயங்களில் இருந்து தமிழ்நாட்டை பிரித்து தனி நாடாக ஆளப்பார்க்கிறாரா? தமிழ் நாடு என்ன தனி நாடா என்றெல்லாம் விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் நாங்கள் பிரிவினைவாதி அல்ல தேசியவாதிதான், இந்தியாவிற்கு ஒன்றென்றால் அதற்கு முதல் ஆளாக நாங்கள் நிற்போம். தேச நலனில் எங்களுக்கு அவ்வளவு அக்கறை உள்ளது என்பதை ஆளுநருக்கும், மோடிக்கும் திமுக அரசை விமர்சிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் உணர்த்துவதற்காகதான் நேற்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் ராணுவ வீரர்களுக்கு ராயல் சல்யூட் அடித்தது மட்டுமில்லாமல், சென்னையிலும் பேரணி நடத்தியிருக்கிறார்” என்ற மெசேஜை அனுப்பிய கையோடு,
மற்றொரு மெசேஜை டைப் செய்தது,
அதாவது, “ஒருசில நாட்களுக்கு முன்னாள் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வகித்து வந்த நீர்வளத் துறையை தவிர்த்து அவரிடம் இருந்த கனிம வளம் மற்றும் சுரங்கத் துறையை அமைச்சர் ரகுபதிக்கு மாற்றி கொடுத்துவிட்டு சட்டத்துறையை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதலாக ஒதுக்கினார் முதல்வர் ஸ்டாலின்.
இப்போது கனிம வளம் மற்றும் சுரங்கத் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் ரகுபதிக்கு பல சிக்கல்கள் அவரின் நட்பு வட்டாரங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் தொடர்வதாக தகவல்கள் வருகின்றன.

துரைமுருகனிடம் கனிம மற்றும் சுரங்கத் துறை கையில் இருந்த காலத்தில் எஸ்.ஆர் என்று அழைக்கக்கூடிய ராமச்சந்திரன், கரிகாலன், ரத்னம் இந்த மூன்றுபேர்தான் மணல் கான்ட்ராக்ட்டில் கொடிகட்டி பறந்தனர்.
இடையில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதால் அவர்கள் இதில் தலையிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து புதுக்கோட்டைக்காரரான அமைச்சர் ரகுபதி தற்போது இந்த துறையை வகிப்பதால், அதே புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் ரகுபதியை அணுகி மீண்டும் மணல் கான்டராக்ட் எடுக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதற்காக, ஏற்கனவே மணல் காண்ட்ராக்ட் செய்துகொண்டிருந்த ராமச்சந்திரனுடைய பார்ட்னரான திமுகவை சேர்ந்த அறந்தாங்கி பரணி கார்த்திகேயனை அணுகி அமைச்சர் ரகுபதியிடம் பேச சொல்லியிருக்கிறார். digital thinnai : mkstalin action against durai murugan
அதன்படியே பரணி கார்த்திகேயனும் அமைச்சர் ரகுபதியை தொடர்புகொண்டு ராமச்சந்திரன் உங்களை சந்தித்து மணல் காண்ட்ராக்ட் பற்றி பேச விருப்பம் தெரிவித்துள்ளார் எப்போது சந்திக்கலாம் என்று கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் ரகுபதி ராமச்சந்திரன் குரூப்பிற்கு காண்ட்ராக்ட் கொடுக்க கூடாது என்று மேலிடம் தனக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த துறை தனக்கு ஒதுக்கும் முன்பே முதலமைச்சர் அலுவலகம் என்ன சொல்கிறதோ அதை மட்டும்தான் தான் செய்யவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
நாமக்கல்லை சேர்ந்த பொன்னர் மற்றும் சங்கர் சகோதரர்களுக்கு மட்டும்தான் சவுடு மற்றும் கிராவல் காண்ட்ராக்ட் கொடுக்கவேண்டுமென தனக்கு உத்தரவிடப்பட்டது என்று சொல்லி ராமச்சந்திரனை இது தொடர்பாக என்னை சந்திக்க அழைத்து வர வேண்டாமென அமைச்சர் ரகுபதி, பரணி கார்திகேயனிடம் சொல்லியிருக்கிறார்.

இந்த கனிமவள துறையை தனக்கு கொடுப்பதற்கு முன்னாள் ஒசூர் எம் எல் ஏ பிரகாஷை அமைச்சராக்கி அவரிடம்தான் இந்த துறையை கொடுக்க இருந்தனர். அதன் பிறகு என்னை அழைத்து இதை நிர்வகிக்க முடியுமா என முதல்வர் கேட்ட பொழுது நான் அதற்கு சம்மதம் தெரிவித்தன் பேரில்தான் சில கட்டுப்பாடுகளையும் விதித்து இந்த துறை என் வசம் வந்தது. ஆகவே தலைமையின் கட்டுப்பாட்டை மீறி என்னால் இதில் எந்த முடிவும் எடுக்க முடியாது என கறாராக கூறியுள்ளார்.
இதுபோன்ற சிக்கல்கள் எழலாம் என்று ஏற்கனவே அறிந்த தலைமை, மற்றுமொரு முக்கிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. இந்த துறைக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பணியமர்த்தப்பட்ட துணை இயக்குனர்களில் ஒருவராகவும் அமைச்சர் துரைமுருகனுக்கு உதவியாளராகவும் இருந்த பெருமாள்ராஜாவை இடமாற்றம் செய்திருக்கிறது.
துரைமுருகனின் உதவியாளராக இருந்தபோதே அவர்தான் இந்த துறைக்கு அமைச்சர் போன்று செயல்படுவார். இந்த துறை சார்ந்த அனைத்தும் தமிழ்நாட்டில் அவர் அனுமதியோடுதான் நடக்கும். ஆகவே இவரை பயன்படுத்திக்கொள்ள ராமச்சந்திரனோ அல்லது வேறு யாரும் முயற்சிப்பர் என்ற காரணத்தால் அவரையும் இடமாற்றம் செய்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை இயக்குனர்களையும் தலைமை தற்போது இடமாற்றம் செய்து வருகிறது.
கனிமவளத்துறையில் ஏற்கனவே இருக்கின்ற சிக்கல்கள் போதும் மேற்கொண்டு எந்த சிக்கலும் உருவாகிவிடக்கூடாது என்ற முனைப்பில் இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்ற மெசேஜை ஃபார்வோர்டு செய்துவிட்டு ஆப்லைன் போனது.
digital thinnai : mkstalin action against durai murugan