வைஃபை ஆன் செய்ததும், ”2026 தேர்தல் களம்தான் இத்தனை பேரை இப்படி படுத்தி எடுக்குதே”என்றபடியே டைப் செய்ய தொடங்கியது..
என்னய்யா.. புலம்பல் கச்சேரியா இன்னைக்கு?
நடக்கிறதெல்லாம் சங்கீதமாவா இருக்கிறது.. இந்த வருஷத்து தேர்தல் ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு வகையில போட்டு பதம் பார்த்துகிட்டு இருக்குது..
இப்ப யாரை பத்தி சொல்லப்போறீரு?
சசிகலாதான்.. அதிமுகவை எப்படியும் மீட்டுடுவோம்.. 1989-ல் ஜெயலலிதாகிட்ட கட்சி போனமாதிரி நம்மகிட்ட எந்த ரூபத்திலாவது கட்சி வந்துடும்னு கனவோட காத்துகிட்டு இருந்தாங்க.. ஆனா கண்ணுக்கு எட்டுன தொலைவு வரைக்கும் அப்படி நடக்க எந்த வாய்ப்புமே இல்லைங்கிறதுதான் எல்லோருக்கும் தெரிஞ்சதாச்சே..
ஆமாய்யா.. இப்ப சசிகலா சொன்ன மாதிரியே களத்துல இறங்குறாங்களா?
இதை பத்தி அவருக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “சின்னம்மாவை (சசிகலா) பொறுத்தவரை காலம் முழுக்க அரசியல்ல இருக்கனும்னு நினைக்கிறாங்க.. அதுக்காகவே
”இந்த எலக்ஷன்ல அம்மா ஆட்சியை கொண்டுவரனும்.. அதனால உங்களை சிஎம் ஆக முன்னிறுத்தி ஒரே மேடையில பிரசாரம் செய்யவும் வர்றேன்”ன்னு எடப்பாடிகிட்ட சொல்லிப் பார்த்தாங்க..
ஆனா எடப்பாடியோ, ‘ஆஹா.. இப்ப ஒரே மேடையில பிரசாரம் செய்ய சின்னம்மாவுக்கு இடம் கொடுத்துட்டா நாளைக்கு நமக்கு எதிராக தினகரன் மாதிரி சிலரை சேர்த்துகிட்டு மறுபடியும் பிரச்சனையை கிளப்புவாங்களே.. நாம ஏன் அதுக்கு இடம் கொடுக்கனும்?னு நோ சொல்லிட்டாரு..
ஆனால் டிடிவி தினகரனை மட்டும் கூட்டணியில சேர்க்க ஓகே சொன்னாரு எடப்பாடி..
டிடிவியும் சித்திகிட்ட சொல்லாமலேயே மறுபடியும் பாஜக கூட்டணிக்கு போயிட்டாரு..
இப்படி எடப்பாடியும் கழற்றிவிட்டாரு.. டிடிவியும் சொல்லாமலே போயிட்டாருன்னு கடுப்புலதான், “தேர்தல்ல போட்டியிடுறது உறுதி.. என் ஆதரவாளர்கள் களத்துல இருப்பாங்க” ன்னு சொல்லி இருந்தாங்க..
அதுக்கு பிறகு ஓபிஎஸ்ஸை கூப்பிட்டு என்ன செய்யலாம்னு பேசுனாங்க.. அப்ப ”செங்கோட்டையன்கிட்ட நான் பேசிகிட்டு இருக்கேன்.. அதாவது, விஜய் கூட்டணியில இணைஞ்சு ஆதரவாளர்களை நிறுத்தலாம்.. அவங்களுக்கு செலவு செய்யவும் பிரசாரம் செய்யவும் ரெடின்னும் சொல்லி இருக்கேன்.. செங்கோட்டையனும் பேசிட்டு சொல்றேன்னு சொல்லி இருக்காரு”ன்னு ஓபிஎஸ் கிட்ட சொன்னாங்க..
இதுக்கு அப்புறம்தான் ஆதரவாளர்கள்னு சிலரை போயஸ்கார்டனுக்கு கூப்பிட்டு, “நீங்க எலக்ஷனில்ல நிக்கிறீங்களா? செலவை நான் பார்த்துக்கிறேன்னு” cஒல்லிகிட்டு இருக்காங்க” என்கின்றனர்.
அதே நேரத்துல “சின்னம்மாவுக்கு ரொம்ப வேண்டியவங்க சிலர், விஜய் கூட கூட்டணிக்கு போறதை கொஞ்ச கூட விரும்பலை.. அவங்க எல்லாம் சின்னம்மாகிட்ட போய், “நீங்க எப்படிப்பட்ட இடத்துல இருந்தவங்க.. இன்னைக்கு பிஎம்மா இருக்கிற மோடியே கார்டனில்ல அம்மாவுக்கான வெயிட் பண்ணாரு.. நீங்க சொல்லிதான் அம்மாவே, மோடிகிட்ட அப்ப பேசுனாங்க..
கார்டனில்ல அமைச்சர்கள், அதிகாரிகள்னு அத்தனை பேரும் உங்களுக்காகவே காத்திருந்தாங்க..
ஆனா, விஜய்யோட பனையூர் பங்களா கதவுகள் இதுவரைக்கும் யாருக்கே திறக்கலையே.. அப்படிப்பட்ட இடத்துல.. நீங்க அந்த பனையூர் பங்களாவுல விஜய்க்காக போய் காத்திருக்கப் போறீங்களாம்மா?
அதுக்கு பேசாம, ”நீங்க ஏற்கனவே அறிவிச்ச மாதிரி அரசியல்ல இருந்தும் பொதுவாழ்க்கையில இருந்தும் விலகுறேன்னு சொன்னதையே ஃபாலோ அப் பண்ணிட்டு போயிடலாமே”ன்னு உருக்கமாக சொல்ல சின்னம்மாவால் இதற்கு எந்த பதிலும் சொல்ல முடியலை” என்கின்றனர்.
இப்ப சசிகலா என்னதான் செய்வாங்க?ன்னு விசாரிச்சா, “அவங்க எலக்ஷனில்ல ஆதரவாளர்களை நிறுத்தப் போறேன்னு சொல்றாங்களே.. யாரை எதிர்த்து யாருக்காக ஆட்களை நிறுத்துவாங்க? இரட்டை இலைக்கு எதிரா ஓட்டு கேட்பாங்களா? அம்மா ஆட்சியை கொண்டு வருவேன்னு இவங்க பிரசாரம் செஞ்சா அது எப்படி சாத்தியம்னு கேள்வி வராதா? எடப்பாடிக்கு எதிராக பிரசாரம் செய்வாங்களா? எங்களுக்கு என்னமோ சசிகலா சொல்ற மாதிரி ஆட்களை எல்லாம் நிறுத்துவாங்களான்னே சந்தேகமாதான் இருக்குது” என்கின்றனர் அதிமுக சீனியர்ஸ்.
அதேபோல, “ சின்னம்மா என்னதான் எங்களை கூப்பிட்டு எலக்ஷனில்ல நில்லுங்க.. நான் பார்த்துக்கிறேன்னு சொன்னாலும் பொதுவாகவே சொந்த காசை வெளியில விடாதவங்க.. தினகரனுக்கு கூட எதுவும் கொடுக்காதவங்க.. எங்களுக்காக செலவு செய்வாங்களாங்கிறது எல்லாம் ரொம்ப சந்தேகம்தான்.. அதான் தயக்கத்துல இருக்கிறோம்” என்கின்றனர் சசிகலாவிடம் பேசிவிட்டு வந்த ஆதரவாளர்கள் என டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
