டிஜிட்டல் திண்ணை: விஜய் ’ஆட்டத்தில்’ ஆதவ் ’மாமனார்’.. அதகள வசூலில் ‘பனையூர்’.. தொகுதிகளுக்கு மல்லுக்கட்டு!

Published On:

| By Mathi

DT Vijay TVK

வைஃபை ஆன் செய்ததும், “அங்கிட்டு கூட்டணியே முடிவாகலை.. இங்கிட்டு தொகுதிகளுக்கு செம்ம போட்டி” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

எந்த கட்சியில இப்பவே ‘களைகட்டும்’ காட்சிகள்?

ADVERTISEMENT

விஜய் தவெகவில்தான்.. காங்கிரஸ் வரும்னு நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும்.. நம்மளை வெச்சு திமுககிட்ட பேரம் பேசுதோ காங்கிரஸ்னு விஜய்க்கு சந்தேகம் இருக்குதுன்னு நாம சொல்லி இருந்தோம்..

இதை கன்ஃபார்ம் செஞ்சு, தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்காரு பார்த்தீரா? அதுல, “கூட்டணி பேரத்துக்காக எங்களை பயன்படுத்தகூடாது”ன்னு ஓப்பனாகவே சொல்லி இருந்தாரு..

ADVERTISEMENT

காங்கிரஸ் வரும்.. வராதுன்னு ஒருபக்கம் இருந்தாலும் தவெகவுல தொகுதிகளை அவங்களாகவே முடிவு செஞ்சுட்டு வேலையை தொடங்கிட்டாங்க..

திருச்செங்கோடு தொகுதியில தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் ஜரூராக தேர்தல் வேலைகளை தொடங்கிட்டாரு.. பிரசார கூட்டங்களை நடத்திகிட்டு இருக்காரு…

ADVERTISEMENT

சென்னை பெரம்பூர் தொகுதியை ஆதவ் அர்ஜூனாவும் சிடி நிர்மல்குமாரும் குறி வைக்கிறாங்க.. அப்படி என்னங்க பெரம்பூரில இருக்குன்னு நாம கேட்டப்ப, “பெரம்பூர் தொகுதியில மட்டும் எங்க கட்சி உறுப்பினர்கள் 40,000 பேரு இருக்காங்க.. அவங்க எல்லாரோட குடும்ப ஓட்டும் வந்துருச்சுன்னா அசால்ட்டா ஜெயிச்சுடுவோம். .அதனாலதான் சார் பெரம்பூருக்கு எங்க கட்சிக்குள்ளேயே போட்டி” என்கின்றனர் தவெக சீனியர்ஸ்.

சரிய்யா விஜய் எங்க போட்டியிட போறாராம்?

விஜய் போட்டியிடுற தொகுதியை பத்தி சொல்றதுக்கு முன்னாடி புரோட்டாகால்படி புஸ்ஸி ஆனந்த் பத்தி சொல்லனுமே.. புஸ்ஸி ஆனந்துக்குதான் இதுவரை எந்த தொகுதின்னே பிடிபடலையாம்.. புதுச்சேரிக்காரர் புஸ்ஸி என்பதால் தமிழ்நாடு- புதுச்சேரி பார்டர் தொகுதிகளை பத்தி யோசிக்கிறாராம்..

விஜய்யைப் பொறுத்தவரைக்கும் ரெண்டு தொகுதிகளை லிஸ்ட்டுல வெச்சிருக்கிறாராம்.. நம்மிடம் பேசுன தவெக சீனியர் தலைவர்கள், ”திருச்சி கிழக்கு- நாகப்பட்டினம் ரெண்டு தொகுதிகளைத்தான் தளபதி (விஜய்) டிக் அடிச்சிருக்காரு.. திருச்சி கிழக்குல வேளாளர்கள், கிறிஸ்தவர்கள் வோட்ஸ் அதிகமா இருக்கு.. நாகையில மீனவர்கள் வோட்ஸ் சாலிடா இருக்கு.. அதனால இந்த இரண்டுல ஒன்னை செலக்ட் செய்யலாம்னு தளபதி யோசிக்கிறாரு” என்கின்றனர்..

தவெகவுல விருப்ப மனு எல்லாம் ஜோரா விற்பனையாகுது போல?

தவெகவுல விருப்ப மனு வாங்க பல்லாயிரக்கணக்குல முட்டி மோதுறாங்க.. ஆனாலும் மா.செ.க்களுக்கு புஸ்ஸி போட்டிருக்கும் ‘கட்டளை’தான் ஹாட் டாபிக்கா இருக்கு.. அது என்னான்னா, “எலக்‌ஷன்ல சீட் வேணும்னா ரூ2. கோடியை கட்சிக்கு கொடுக்கனும்.. அப்புறமா தேர்தல் செலவுகளையும் பார்க்கனும்.. அப்படிப்பட்ட ஆளுகளை கூட்டிகிட்டு வாங்கன்னு” மா.செக்கள்கிட்ட சொல்லி இருக்காரு புஸ்ஸி என்கின்றனர்..

தவெகவுல இன்னொரு மேட்டரையும் நம்மகிட்ட ஷேர் செஞ்சிருக்காங்க.. அதாவது, “ஆதவ் அர்ஜூனாவின் மாமனார் லாட்டரி மார்ட்டினை பத்திதான் சொல்றாங்க.. திமுகவுக்கு தேர்தல் நிதி எல்லாம் கொடுத்தோம்.. ஆனாலும் திமுக எங்களுக்கு எதுவுமே செய்யலைன்னு மார்ட்டின் ரொம்ப ஆதங்கப்படுறாராம் அதனால இந்த டைம், காங்கிரஸ்- தவெக கூட்டணி கன்ஃபார்ம் ஆச்சுன்னா எலக்‌ஷன் நிதி தர ரெடியா இருக்கிறாராம்.. அதுவும் ரூ500 கோடி வரைக்கும் ‘இறக்கிடலாம்’னும் மார்ட்டின் தரப்புல விஜய்கிட்ட சொல்லப்பட்டிருக்குன்னு கட்சிக்குள்ள கிசுகிசுக்கிறாங்கய்யா.. என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share