டெல்லி செங்கோட்டை அருகே இன்று (நவம்பர் 10) நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்; மேலும் 24 பேர் படுகாயமடைந்தனர்.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள்:
- மே 25, 1996: டெல்லி லாஜ்பத் நகரின் சென்ட்ரல் மார்க்கெட்டில் குண்டு வெடிப்பு. 16 பேர் பலி
- அக்டோபர் 1, 1997: சதர் பஜார் அருகே இரட்டை குண்டு வெடிப்புகள். 30 பேர் காயம்
- அக்டோபர் 10, 1997: சாந்திவன், கவுடியா புல் மற்றும் கிங்ஸ்வே கேம்ப் ஆகிய இடங்களில் மூன்று குண்டு வெடிப்புகள். ஒருவர் பலி; 16 பேர் காயம்
- அக்டோபர் 18, 1997: ராணி பாக் மார்க்கெட்டில் இரட்டை குண்டு வெடிப்புகள். ஒருவர் பலி; 23 பேர் காயம்
- அக்டோபர் 26, 1997: கரோல் பாக் மார்க்கெட்டில் குண்டு வெடிப்புகள். ஒருவர் பலி; 34 பேர் காயம்
- நவம்பர் 30, 1997: செங்கோட்டை பகுதியில் இரட்டை குண்டு வெடிப்புகள். 3 பேர் பலி; 70 பேர் காயம்
- டிசம்பர் 30, 1997: பஞ்சாபி பாக் அருகே பேருந்தில் குண்டு வெடிப்பு. 4 பேர் பலி; 30 பேர் காயம்
- பிப்ரவரி 27, 2000: பஹர்கஞ்சில் குண்டு வெடிப்பு. 8 பேர் காயம்
- மார்ச் 16, 2000: சதர் பஜாரில் குண்டு வெடிப்பு. 7 பேர் காயம்
- ஜூன் 18, 2000: செங்கோட்டை அருகே இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகள். 2 பேர் பலி
- டிசம்பர் 13, 2001: நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல். இதில் சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 22, 2005: லிபர்ட்டி மற்றும் சத்யம் சினிமா ஹால்களில் குண்டு வெடிப்புகள். ஒருவர் பலி; 60 பேர் காயம்
- அக்டோபர் 29, 2005: தீபாவளிப் பண்டிகையை ஒட்டி சரோஜினி நகர், பஹர்கஞ்ச், கோவிந்த்புரி ஆகிய மூன்று பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்புகளில் 62 பேர் பலி.
- ஏப்ரல் 14, 2006: ஜமா மஸ்ஜித் உள்ளே இரண்டு குண்டு வெடிப்புகள். 14 பேர் காயம்
- செப்டம்பர் 13, 2008: டெல்லியின் கரோல் பாக், கன்னாட் பிளேஸ் மற்றும் கிரேட்டர் கைலாஷ் ஆகிய பரபரப்பான பகுதிகளில் 31 நிமிட இடைவெளியில் ஐந்து தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 26 பேர் பலி; 135 பேர் காயமடைந்தனர்.
- மே 25, 2011: டெல்லி உயர் நீதிமன்றத்தின் 7வது நுழைவாயிலில் சிறிய அளவிலான குண்டு வெடிப்பு ஒன்று நிகழ்ந்தது.
- செப்டம்பர் 7, 2011: டெல்லி உயர் நீதிமன்றத்தின் 5-வது நுழைவாயிலில் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் உயிரிழந்தனர். 76 பேர் காயமடைந்தனர்.
- நவம்பர் 10, 2025: டெல்லி செங்கோட்டை அருகே மீண்டும் கார் குண்டு வெடிப்பு; 10 பேர் பலி
