உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தின் ரீரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக அப்படக்குழு அறிவித்துள்ளது.
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இன்டர்ஸ்டெல்லார்’ . இந்தத் திரைப்படம் உலகெங்கும் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. விமர்சன ரீதியாகவும் பல்வேறு பாராட்டுகளைப் பெற்றது.
சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படங்களை கையாள்வதில் வல்லவரான கிறிஸ்டோபர் நோலனின் ஆகச் சிறந்த திரைப்படங்களில் மிக முக்கியமான படமாக ‘இன்டர்ஸ்டெல்லார்’ கருதப்படுகிறது.
2015 ஆம் ஆண்டு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ்க்கான ஆஸ்கார் விருதை இந்தத் திரைப்படம் வென்றது. இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரின் அமைத்த பின்னணி இசை இன்று வரை அசைக்க முடியாத சிறப்பை கொண்டுள்ளது.
படம் பேசும் அறிவியல், கோட்பாடு போன்றவை இயக்குநர் ‘ ஸ்டான்லி குப்ரிக் ‘ இயக்கிய உலகப் புகழ்பெற்ற சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமான ‘ 2001 : ஸ்பேஸ் ஒடிசி ( 1968 )’ திரைப்படத்தின் அடுத்த கட்டமாக உள்ளது என்பது திரைப்பட ஆய்வாளர்களின் கருத்து.
இந்த நிலையில் வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி இந்தப் படத்தின் 10 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ‘ இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்தப் படத்தின் இயக்குநரான கிறிஸ்டோபர் நோலன் 70MM ஐமேக்ஸ் டிஜிட்டல் திரையில் ரீரிலீஸ் ஆசைப்பட்டார். அதன் தொடர்ச்சியாக இந்தத் திரைப்படத்தை டிசம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக அப்படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தப் படத்தின் 70 MM பிரின்ட்கள் அழிந்து விட்டதாக வதந்திகள் பரவின. ஆனால், அதை இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– ஷா
24 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்!
“உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை” : வினேஷ் போகத்துக்கு நயன்தாரா ஆலியா பட் ஆறுதல்!