சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க… தினமும் இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க..!

Published On:

| By Santhosh Raj Saravanan

daily habits for healthy kidneys

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக (Halthy Kidneys) வைத்திருக்க தினமும் சில பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.

உடலில் இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை முக்கிய உறுப்புகளாக உள்ளன. சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தும் முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. உடலில் இருந்து அதிகமான தண்ணீரை சிறுநீர் வழியாக சிறுநீரகம் வெளியேற்றுகிறது. இதன்மூலம் உடலின் பொட்டாசியம் மற்றும் சோடியம் சமநிலையானது பராமரிக்கப்படுகிறது. சிறுநீரகம் பாதிக்கப்பட்டால் நாம் டயலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும். சிறுநீரகம் பழுதடைந்தால் அது உயிரிழப்பைக் கூட ஏற்படுத்தும்.

ADVERTISEMENT

நமது அன்றாக பரபரப்பான வாழ்க்கையில் உடல்நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. எனினும், சிறுநீரகங்களை ஆரோக்கியமாக (healthy kidneys) வைத்திருக்க நமது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றங்கள், உணவுப் பழக்கத்தில் மாற்றத்தை செய்ய வேண்டும்.

அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்:

நம்மில் சிலர் ஒரு நாளைக்குஅரை லிட்டர் தண்ணீர் (Stay hydrated) கூட குடிப்பது இல்லை. இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுநீரகங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.

ADVERTISEMENT

உப்பின் அளவை குறைக்க வேண்டும்:

உங்களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சனை (Blood pressure) இருந்தால் உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் என்பது சிறுநீரகப் பிரச்சனைக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது. பதப்படுத்தப்பட்ட,  துரித உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.  எண்ணெய் அதிகம் தேவைப்படும் உணவுகள், உப்பு அதிகமுள்ள உணவுகளை கண்டிப்பாக தவிர்த்துவிட வேண்டும்.

ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க வேண்டும்:

உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு (Blood sugar level) அதிகமாக இருந்தால், அது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். ஆகவே, உங்கள் ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க அதற்கு ஏற்ற உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

ADVERTISEMENT
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்:

சிறுநீரகத்தையும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்க விரும்பினால் தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  உடற்பயிற்சி இல்லை என்றால் 30 நிமிடங்கள் வரை வியர்க்க விறுவிறுக்க நடைபயிற்சி (Exercise daily) செய்யலாம்.  யோகா, சைக்கிள் ஓட்டுதலை செய்யலாம். இது  உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு, உங்கள் ரத்த அழுத்தத்தையும் இயல்பாக வைத்திருக்கும். இது உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக இருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

புகை, மதுவை தவிர்க்க வேண்டும்:

மது அருந்துதல், புகைப் பழக்கம் ஆகியவை உடல்நலத்திற்கு கேடு விளைவிப்பதோடு சிறுநீரகத்தின் செயல்பாட்டினை மிகவும் மோசமாக்கும். ஆகவே, இந்த இரு பழக்கங்களையும் (avoid Smoking and Drinking) கைவிட்டுவிடுங்கள்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை:

6 மாதங்களுக்கு ஒருமுறை அத்தியாவசிய ரத்த பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதாவது, ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் சிறுநீரக செயல்பாட்டு சோதனையை மேற்கொள்ள வேண்டும். இது சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ள உதவுகிறது.  தொடர்ந்து வயிற்று வலி அல்லது முதுகுவலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் (Symptoms of kidney disease) ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் இது சிறுநீரகப் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share