டிட்வா புயலால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமாக கனமழை பெய்யக் கூடும் என்பதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயலானது தற்போது இலங்கையின் வடக்கு பகுதியை கடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து வட தமிழ்நாடு நோக்கி டிட்வா புயல் நகரும்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் வரலாறு காணாத பெருமழையும் பேரழிவும் ஏற்பட்டுள்ளது. டிட்வா புயலால் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.
தமிழ்நாட்டின்
செங்கல்பட்டு
விழுப்புரம்
கடலூர்
மயிலாடுதுறை மாவட்டங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமான அதீத கனமழை கொட்டும் என்பதால் இன்று நவம்பர் 29-ந் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
மேலும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை கொட்டித் தீர்ப்பதால் சென்னை விமான நிலையத்தில் 14 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
