இந்தியாவின் சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம்(CSIR-CIMFR) ஜூன் 26-27 தேதிகளில், கேரிங்க்-2024(CARING-2024) என்கிற தலைப்பில் இரண்டு நாள் நிகழ்வை நடத்தி முடித்துள்ளது. இதன் நோக்கம் நிலக்கரியை வாயுவாக்கம் பண்ணுவதில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் ஆராய்வது. current affairs in tamil coal gasification
நிலக்கரி வாயுவாக்கம் என்றால் என்ன? current affairs in tamil coal gasification
- நிலக்கரியைக் காற்று, ஆக்ஸிஜன், அல்லது கார்பன் டை ஆக்ஸைடின் மூலம் எரித்து எரிவாயுவாக மாற்றுவது தான் நிலக்கரி வாயுவாக்கம்(Coal Gasification) எனப்படுகிறது.
- இதுமட்டுமல்லாமல், நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கு முன்பே, நிலத்திற்குள்ளேயே வைத்து, அதை எரி வாயுவாக உருமாற்றம் செய்யப்படுகிறது.
- இந்த எரிவாயு “சின் கேஸ்”(Syngas) என்று அழைக்கப்படுகிறது. இது கார்பன் மோனொக்ஸைட்(CO), ஹைட்ரஜன்(H2), கார்பன் டை ஆக்ஸைட்(CO2), மீதேன்(CH4), நீராவி(H2O) போன்ற வாயுக்களின் கலவை ஆகும்.
சின் கேஸின் பயன்பாடுகள்:
- மின்சாரம் தயாரிப்பதற்கு உதவும்
- நிலக்கரிக்குப் பதிலாக இந்த எரிவாயுவைப் பயன்படுத்தலாம்.
- இயற்கை எரிவாயு(Natural Gas), மெத்தனால், அமோனியா இறக்குமதியைக் குறைக்கும்.
- சுற்றுச்சுழல் மாசுபாட்டைக் குறைக்க உதவும்.
- விவசாய உரம், ஸ்டீல் தயாரிப்பதற்கு மற்றும் பல தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் தயாரிப்பதற்கு உதவும்.
- பாரிஸ் 2016 இலக்கை எட்டுவதற்கு சின் கேஸ் தயாரிப்பு உதவும்.
இந்தியாவில் உள்ள நிலக்கரி வாயுவாக்கம் நிலையங்கள்:
- திருச்சி மற்றும் புனேவில் இரண்டு நிலையங்கள் உள்ளன. ஆனால் இவை முழுப் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்திய அரசாங்கத்தின் முன்னெடுப்புகள்:
- நிலக்கரி எரிவாயுவின் அவசியத்தைக் கருதி, இந்திய அரசாங்கம் 100 மெட்ரிக் டன் நிலக்கரி எரிவாயுவை 2030க்குள் தயாரிப்பதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சவால்கள்:
- இதற்கு நல்ல தரமான நிலக்கரி தேவை. ஆனால் இந்தியாவில் கிடைப்பதோ தரம் குறைந்த நிலக்கரி மற்றும் அதில் சாம்பலின் அளவு மிக அதிகம்.
- தயாரிப்பு செலவு அதிகம்.
- தேவையான தொழில்நுட்பம் நமது நாட்டில் இல்லை.
- இந்த தொழிற்சாலை அமைப்பதற்கு இடம், தண்ணீர் வசதி, மின்சாரம் போன்றவை மிக அவசியம்.
மாணவர்களுக்கான குறிப்பு:
- UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
- UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group 2 மற்றும் Group 1 Prelimsக்கு உதவும்.
- தொழில்நுட்பம் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
நேட்டோ தலைவரானார் மார்க் ரித்த.