சென்னையில் கே.சி. வேணுகோபால்- ’ஆட்சியில் பங்கு’ கேட்டு பேனர் பிடித்த காங்கிரஸ் தொண்டர்கள்!

Published On:

| By Mathi

Congress Protest

காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். அப்போது காங்கிரஸ் கட்சியினர் ‘ஆட்சியில் பங்கு’ கோரி பதாகைகளை தூக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளரான கே.சி. வேணுகோபால், புதுச்சேரி செல்வதற்காக இன்று தமிழகம் வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் அவரை வரவேற்றனர்.

ADVERTISEMENT

அப்போது,

  • ஆட்சியில் உறுதியான பங்கு வேண்டும்
  • திமுக கூட்டணியில் மரியாதை வழங்கப்பட வேண்டும்
  • அரசு நியமனப் பதவிகளில் காங்கிரஸ் கட்சியினருக்கும் உரிய பங்கு தர வேண்டும்
  • உள்ளாட்சி அமைப்புகளில் 30% இடங்கள் தர வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியபடி சில காங்கிரஸ் கட்சியினர் அங்கு நின்றிருந்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share