முதல்வர் ஸ்டாலின் அறிவாலயம் வந்துள்ள நிலையில், காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவும் வருகை தந்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இறுதியாக காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் என பைனல் செய்து நேற்று இரவு ப.சிதம்பரத்திடம் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்த தகவலை காங்கிரஸ் மேலிடத்துக்கு ப.சிதம்பரம் அனுப்பினார்.
ஆனால் காங்கிரஸ் 30 தொகுதிகளை கேட்டு பெற தொடர்ந்து ஆலோசித்து வந்தது. ஆனால் ஸ்டாலின் 28 தொகுதிகள்தான் என்பதில் உறுதியாக இருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
இந்தசூழலில் முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழுவும் அறியாலயம் வந்தது. இவர்கள் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினுடன் தனியாக பேசி வருகின்றனர்.
