வைஃபை ஆன் செய்ததும், ”களத்துல வேற மாதிரி அனலடிக்குதய்யா” என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா.. புதுச்சேரி பஞ்சாயத்தா?
ஆமாய்யா.. புதுச்சேரியில இன்னைக்கு வேட்பு மனு வாபஸ் வாங்க கடைசி நாள். ஆனாலும் பல தொகுதிகளில்ல காங்கிரஸ் ‘வேலையை’ காட்டிடுச்சு. திமுக, விசிக தொகுதிகளில்ல வேட்பு மனுக்களை வாபஸ் வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம் காங்கிரஸ் கட்சிகாரங்க.. கேட்டா பிரண்ட்லி பைட்டிங்காம்யா..
இப்ப புதுச்சேரியில சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுறாங்க.. ஒட்டுமொத்தமாக ‘இந்தியா’ கூட்டணிக்கே காங்கிரஸ் கொள்ளி வெச்சுடுச்சுய்யா..
இவ்வளவுக்கு யாருய்யா காரணம்?
நாம ஏற்கனவே சொன்னதுதான்.. சாட்சாத் காங்கிரஸ்தான்.. ‘ராகுல் காந்தி’ காங்கிரஸைப் பொறுத்தவரைக்கும் திமுகவுக்கு குட்பை சொல்லிட்டு விஜய் கூட போக முடிவெடுத்துடுச்சு.. இதுக்கான வெள்ளோட்டம்தான் இப்ப புதுச்சேரியில நடக்குதுன்னு சொல்றாங்க..
சரிய்யா.. இவ்வளவு நடக்குது.. திமுக எதுவுமே பேசாம இருக்கே?
அப்படிய்யா தெரியுது? வெளியேதான் அப்படி.. ஆனா சிஎம் ஸ்டாலின் எப்பவோ, காங்கிரஸ் இப்படித்தான் போகும்னு முடிவுக்கு வந்துட்டாராம்
இதை பத்தி ஸ்டாலினுக்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “புதுச்சேரியில நடக்கிறது எல்லாத்தையும் ஸ்டாலின் கவனிச்சுகிட்டுதான் இருக்காரு.. காங்கிரஸ் குடைச்சல் கொடுக்கிற நேரத்துல அறிவாலயத்துல ஒரு சம்பவம் நடந்துச்சு..
திமுகவுல விருப்ப மனு கொடுத்தவங்ககிட்ட ஸ்டாலின் நேர்காணல் நடத்தினாரு இல்லையா.. அப்ப அறந்தாங்கி தொகுதி திமுககாரங்க வந்திருந்தாங்க..
அதுல அறந்தாங்கி தொகுதியில 2006 எலக்ஷன்ல ஜெயிச்ச உதயம் சண்முகமும் வந்திருந்தாரு..
அவர்கிட்ட நேர்காணல் நடத்துனப்ப, “அறந்தாங்கி தொகுதியை மகனுக்காக இந்த டைமும் திருநாவுக்கரசர் கேட்குகிறார்..”னு ஸ்டாலின் சொல்லி இருக்காரு..
அதுக்கு உதயம் சண்முகம், “இதே அறந்தாங்கி தொகுதியில 2006-ல் நாம ஜெயிச்சோம் தலைவரே.. நாம ஜெயிச்ச தொகுதியைத்தானே 2011, 2016, 2021-ன்னு மூணு முறை காங்கிரஸுக்கு கொடுத்திருக்கோம்.. நாம ஜெயிச்ச தொகுதியை 2011-ல் காங்கிரஸுக்கு கொடுத்தோம்.. அதே மாதிரி காங்கிரஸ் போன முறை ஜெயிச்ச தொகுதியை இந்த டைம் நமக்கு தரட்டுமே”ன்னு சொன்னாரு..
இதை உன்னிப்பா கேட்ட ஸ்டாலின், “உதயம் நீங்க சொல்றது நல்ல வேலிட் பாயிண்ட்தான்.. இல்லைன்னு சொல்லலை..
காங்கிரஸ் கட்சி ரொம்பவே இழுத்தடிச்சதால நானே கூட, அவங்க கூட்டணியே வேண்டாம்னுதான் முடிவுல இருந்தேன்..
போன 2019 எலக்ஷன்ல காங்கிரஸ் கட்சி அடம்பிடிச்சு 10 சீட் வாங்குனாங்க.. அதுல தேனி தொகுதியில தோத்துட்டாங்க.. அடுத்த 2024 எலக்ஷன்ல, ”நம்ம கூட்டணியில கமல் கட்சி மநீம வந்துருக்கு.. அவங்களுக்கு ஒரு சீட் தரனும்.. அதனால நீங்க போன டைம் ஜெயிச்ச 9 தொகுதியை மட்டும் வெச்சுக்குங்க.. ஒரு தொகுதியை மநீமவுக்கு கொடுக்கலாம்”னு சொன்னேன்..
அதுக்கு, “நீங்க அப்படி சீட்டை குறைச்சுட்டா ஆல் இண்டியா லெவல்ல எங்களுக்கு பாதிப்பு வரும்.. மத்த மாநில கூட்டணி கட்சிகளுக்கும் எங்க சீட்டை குறைச்சுடுவாங்க.. அதனால 2019-ல் போட்டியிட்ட மாதிரியே 10 சீட்டை கொடுங்கன்னு வாங்கினாங்க.. நம்ம ரெண்டு கட்சிக்குமான உற்வுதான் ரொம்ப முக்கியம்”னு சொன்னாங்க..
இப்ப இந்த தேர்தல்ல, லோக்சபா எலக்ஷன்ல நீங்க சொன்ன மாதிரியே, காங்கிரஸ் கட்சி போன டைம் போட்டியிட்ட 25 சீட்ல நில்லுங்கன்னு சொன்னோம்.. அதுக்கு அவங்ககிட்ட இருந்து பதிலே வரலை..
ஆனா 41 சீட்டுல ஆரம்பிச்சாங்க.. அப்புறமா 30 சீட்தான் வேணும்னு உறுதியா சொன்னாங்க..
நாம, 28 சீட்டுக்கு மேல இல்லைன்னு சொல்லிட்டோம்.. அப்புறமாக அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க..
நாம நினைக்கிறது என்னான்னா, இந்த எலக்ஷன் முடியுற வரைக்கும்தான் காங்கிரஸ் நம்ம கூட இருக்கப் போகுது.. அதுக்கு பிறகு அவங்க நம்ம கூட்டணியில இருக்கமாட்டாங்க.. அதனால நிச்சயமாக 2031 தேர்தல்ல அறந்தாங்கியில உதயசூரியன் சின்னத்துலதான் போட்டி போட போறோம்.. இந்த எலக்ஷனுக்கு மட்டும் நீங்க எல்லாம் ஒத்துழைப்பு கொடுங்க”ன்னு சொல்லி அனுப்பினாரு..என்றனர்.
புதுச்சேரியில நடக்குற ‘சின்ன பிள்ளை’தனமான காங்கிரஸ் சேட்டைகள் எல்லாத்தையும் பார்க்கும் போது காங்கிரஸ் ஒரு முடிவெடுத்துட்டுதான் இத்தனை ஆட்டம் போடுது.. 2029 லோக்சபா எலக்ஷன்ல விஜய் கூட கை கோர்க்க இப்பவே காங்கிரஸ் ரூட் ரெடியாகிட்டதுதான் நெஜம்யானு டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
