27 ஆண்டுகளுக்குப் பின்… நாளை மாநில தேர்தல் ஆணையர்களின் மாநாடு

Published On:

| By Mathi

State Election Commissioners meet

இந்திய தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையர்களின் தேசிய வட்டமேசை மாநாட்டை நாளை பிப்ரவரி 24-ந் தேதி டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ளது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வட்டமேசை மாநாடு நடைபெகிறது. கடைசியாக இதுபோன்ற மாநாடு 1999-ம் ஆண்டு நடைபெற்றது.

ADVERTISEMENT

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் முன்னிலையில் இந்த வட்டமேசை மாநாடு நடைபெறும். அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில தேர்தல் ஆணையர்கள் தங்கள் சட்ட, தொழில்நுட்ப நிபுணர்களுடன் இதில் பங்கேற்பார்கள். 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

தேர்தல் செயல்முறைகள் தொடர்பாக ஒருங்கிணைப்பை அதிகரிப்பதே இந்த வட்டமேசை மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். இதில் நடைபெறும் விவாதங்கள் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை வழங்கும் என்றும், தேர்தல் நிர்வாகத்தில் கூட்டுறவு கூட்டாட்சி உணர்வை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

நாள் முழுவதும் நடைபெறும் இந்த மாநாட்டின் போது, தேர்தல் செயல்முறைகளை வலுப்படுத்துவதோடு, தொழில்நுட்பம், வாக்காளர் பட்டியல்களைப் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்தும் விவாதங்கள் நடைபெறும்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட இசிஐநெட் (ECINET) டிஜிட்டல் தளம் குறித்து ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் விளக்கங்களை வழங்குவார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வலிமை, வெளிப்படைத்தன்மை, பாதுகாப்புகள் குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்படும்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share