கோயில் குளத்தில் விழுந்து உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் நிதியுதவி

Published On:

| By Pandeeswari Gurusamy

Condolences to the parents of deceased children

திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமம், மகாத்மா காந்தி நகரில் உள்ள பொன்னியம்மன் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் பெற்றோருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமம், மகாத்மா காந்தி நகர், பொன்னியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் தமீம் அன்சாரி (எ) தமிழரசு மற்றும் அவரது மனைவி திருமதி.வசந்தா ஆகிய இருவரும் நேற்று ( நவம்பர் 1) நண்பகல் 12.00 மணியளவில் பணி நிமித்தம் காரணமாக தங்களது இரண்டு குழந்தைகள் செல்வன். ரியாஸ் (வயது 5) மற்றும் செல்வன். ரிஸ்வான் (வயது 3) ஆகிய இருவரையும் வீட்டில் விட்டு வெளியில் சென்ற நிலையில் மேற்படி குழந்தைகள் இருவரும் அருகிலுள்ள பொன்னியம்மன் கோயில் குளத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ADVERTISEMENT

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share