பல்வேறு மாநிலங்களில் நடந்த வாக்கு முறைகேடுகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 13) கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் நடந்த வாக்கு முறைகேடுகளுக்குக் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீகாரி இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தைக் கைவிட வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓரணியில் தமிழ்நாடு முழக்கத்தை சிறப்பாக நடத்திய திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.