டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினின் 7 படைத்தளபதிகள்… ஒதுக்கப்பட்ட தொகுதி பட்டியல்…தேர்தல் யுத்தம் ஆரம்பம்!

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததுதான் போதும்.. இந்தியா- பாகிஸ்தான் மோதல், டொனால்ட் டிரம்ப் தலையீடு என ஏராளமான யுத்த செய்திகள்தான் குவிந்தன.

இவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில்
ஆளும் திமுக அடுத்தடுத்த பல்வேறு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதில் மிக முக்கியமானது மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனம்தான். 2026 தேர்தல் யுத்தத்துக்கு தமது 7 ‘படைத் தளபதிகளை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அறிவிக்க இருக்கிறார்.

திமுகவில் மூத்த அமைச்சர்களில் ‘ஆக்டிவ்’ மோடில் இருக்கக் கூடியவர்கள், பம்பரமாக சுழன்று பணியாற்றக் கூடிய சீனியர்கள் என்ற கேட்டகிரிகளில் முதல்வர் ஸ்டாலின் இந்த மண்டலப் பொறுப்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்துள்ளாராம். நீலகிரி சென்றிருந்த போது இந்த பட்டியலை இறுதி செய்து ஓகே சொன்னாராம் முதல்வர் ஸ்டாலின்.

திமுகவின் 7 மண்டல பொறுப்பாளர்கள் யார்?

முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் 4-வது இடத்தில் இருக்கும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு,

அமைச்சரவையில் 6-வது இடத்தில் இருக்கும் பொதுப்பணிகள் துறை அமைச்சர் எ.வ.வேலு

அமைச்சரவையில் 9-வது இடத்தில் இருக்கும் நிதித்துறை, தொல்லியல் துறை, சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு

அமைச்சரவையில் 19-வது இடத்தில் இருக்கும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர்பாதுகாப்பு, விலைக்கட்டுப்பாடு துறை அமைச்சர் அர. சக்கரபாணி

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர்களான ஆ.ராசா எம்பி, கனிமொழி எம்பி

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்தான் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்த மண்டலப் பொறுப்பாளர்களாம்.

யாருக்கு எந்த மண்டலம்? எந்தெந்த தொகுதிகள்?

அத்துடன் ஒவ்வொரு மண்டலப் பொறுப்பாளருக்கும் எந்தெந்த தொகுதிகள் என்பதையும் முடிவு செய்திருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

அமைச்சர் கே.என்.நேருவுக்கு மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்கள் ஒதுக்கப்படுகின்றன. அமைச்சர் கே.என்.நேருவுக்கு திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான பொறுப்பு வழங்கப்பட உள்ளது.

அமைச்சர் நேருவுக்கு மொத்தம் 40 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தொகுதிகள் விவரம்:

மணப்பாறை
ஸ்ரீரங்கம்
திருச்சிராப்பள்ளி (மேற்கு)
திருச்சிராப்பள்ளி (கிழக்கு)
திருவெறும்பூர்
லால்குடி
மண்ணச்சநல்லூர்
முசிறி
துறையூர்
பெரம்பலூர்
குன்னம்
அரியலூர்
ஜெயங்கொண்டம்
திட்டக்குடி
விருத்தாச்சலம்
நெய்வேலி
பண்ருட்டி
கடலூர்
குறிஞ்சிப்பாடி
புவனகிரி
சிதம்பரம்
காட்டுமன்னார்கோவில்
சீர்காழி
மயிலாடுதுறை
பூம்புகார்
நாகப்பட்டினம்
கீழ்வேலூர்
வேதாரண்யம்
திருத்துறைப்பூண்டி
மன்னார்குடி
திருவாரூர்
நன்னிலம்
திருவிடைமருதூர்
கும்பகோணம்
பாபநாசம்
திருவையாறு
தஞ்சாவூர்
ஒரத்தநாடு
பட்டுக்கோட்டை
பேராவூரணி

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு ஆன்மீக பூமியான திருவண்ணாமலை உள்ளிட்ட ஆந்திரா- கர்நாடகா எல்லை மாவட்டங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அமைச்சர் எ.வ.வேலு, பொறுப்பாளராகிறார்.


அமைச்சர் எ.வ.வேலுவுக்கு மொத்தம் 43 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தொகுதிகள் விவரம்:

அரக்கோணம்
சோளிங்கர்
காட்பாடி
ராணிப்பேட்டை
ஆர்க்காடு
வேலூர்
அணைக்கட்டு
கீழ்வைதிங்குப்பம்
குடியாத்தம்
வாணியம்பாடி
ஆம்பூர்
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர்
ஊத்தங்கரை
பர்கூர்
கிருஷ்ணகிரி
வேப்பனஹள்ளி
ஹோசூர்
தளி
பாலக்கோடு
பென்னாகரம்
தருமபுரி
பாப்பிரெட்டிப்பட்டி
அரூர்
செங்கம்
திருவண்ணாமலை
கீழ்பெண்ணாத்தூர்
கலசப்பாக்கம்
போளூர்
ஆரணி
செய்யாறு
வந்தவாசி
செஞ்சி
மயிலம்
திண்டிவனம்
வானூர்
விழுப்புரம்
விக்கிரவாண்டி
திருக்கோவிலூர்
உளுந்தூர்பேட்டை
ரிஷிவந்தியம்
சங்கராபுரம்
கள்ளக்குறிச்சி

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு தென் மாவட்டங்களின் தலைவாசலான திண்டுக்கல் தொடங்கி மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் ஒதுக்கப்படுகின்றன.

அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு 42 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தொகுதிகள் விவரம்:

பழனி
ஒட்டன்சத்திரம்
ஆத்தூர்
நிலக்கோட்டை
நத்தம்
திண்டுக்கல்
வேடசந்தூர்
கந்தர்வகோட்டை
விராலிமலை
புதுக்கோட்டை
திருமயம்
ஆலங்குடி
அறந்தாங்கி
காரைக்குடி
திருப்பத்தூர்
சிவகங்கை
மானாமதுரை
மேலூர்
மதுரை கிழக்கு
சோழவந்தான்
மதுரை வடக்கு
மதுரை தெற்கு
மதுரை மத்தி
மதுரை மேற்கு
திருப்பரங்குன்றம்
திருமங்கலம்
உசிலம்பட்டி
ஆண்டிப்பட்டி
பெரியகுளம்
போடிநாயக்கனூர்
கம்பம்
ராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
சாத்தூர்
சிவகாசி
விருதுநகர்
அருப்புக்கோட்டை
திருச்சுழி
பரமக்குடி
திருவாடானை
ராமநாதபுரம்
முதுகுளத்தூர்

அமைச்சர் அர.சக்கரபாணிக்கு கொங்கு மண்டலத்தின் சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களும், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பிக்கு தலைநகரம் சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்,பிக்கு ‘முத்துநகர்’ என போற்றப்படும் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களும் ஒதுக்கப்படுகின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, கொங்கு மண்டலத்தின் கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் பொறுப்பு வழங்கப்பட இருக்கிறது.

மண்டலப் பொறுப்பாளராகும் அமைச்சர் அர. சக்கரபாணிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தொகுதிகள் விவரம்:

கெங்கவள்ளி
ஆத்தூர்
ஏற்காடு
ஓமலுர்
மேட்டூர்
எடப்பாடி
சங்ககிரி
சேலம் (மேற்கு)
சேலம் (வடக்கு)
சேலம் (தெற்கு)
வீரபாண்டி
ராசிபுரம்
சேந்தமங்கலம்
நாமக்கல்
பரமத்தி-வேலூர்
திருச்செங்கோடு
குமாரபாளையம்
ஈரோடு (கிழக்கு)
ஈரோடு (மேற்கு)
மொடக்குறிச்சி
பெருந்துறை
பவானி
அந்தியூர்
கோபிச்செட்டிபாளையம்
பவானிசாகர்

மண்டலப் பொறுப்பாளராகும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு மொத்தம் 37 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தொகுதிகள் விவரம்:

கும்மிடிப்பூண்டி
பொன்னேரி
திருத்தணி
திருவள்ளூர்
பூந்தமல்லி
ஆவடி
மதுரவாயல்
அம்பத்தூர்
மாதவரம்
திருவெற்றியூர்
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
பெரம்பூர்
கொளத்தூர்
வில்லிவாக்கம்
திரு-வி-க-நகர்
எழும்பூர்
ராயபுரம்
துறைமுகம்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
ஆயிரம் விளக்கு
அண்ணா நகர்
விருகம்பாக்கம்
சைதாப்பேட்டை
தியாகராயநகர்
மயிலாப்பூர்
வேளச்சேரி
சோழிங்கநல்லூர்
ஆலந்தூர்
ஸ்ரீபெரும்புதூர்
பல்லாவரம்
தாம்பரம்
செங்கல்பட்டு
திருப்போரூர்
செய்யூர்
மதுராந்தகம்
உத்திரமேரூர்
காஞ்சிபுரம்

மண்டலப் பொறுப்பாளராகும் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பிக்கு 22 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தொகுதிகள் விவரம்:

விளாத்திகுளம்
தூத்துக்குடி
திருச்செந்தூர்
ஸ்ரீவைகுண்டம்
ஒட்டப்பிடாரம்
கோவில்பட்டி
சங்கரன்கோவில்
வாசுதேவநல்லூர்
கடையநல்லூர்
தென்காசி
ஆலங்குளம்
திருநெல்வேலி
அம்பாசமுத்திரம்
பாளையங்கோட்டை
நாங்குநேரி
ராதாபுரம்
கன்னியாகுமரி
நாகர்கோவில்
குளச்சல்
பத்மநாபபுரம்
விளவங்கோடு
கிள்ளியூர்


மண்டலப் பொறுப்பாளராகும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தொகுதிகள் விவரம்:

தாராபுரம்
காங்கேயம்
அவினாசி
திருப்பூர் (வடக்கு)
திருப்பூர் (தெற்கு)
பல்லடம்
உடுமலைப்பேட்டை
மடத்துக்குளம்
உதகமண்டலம்
கூடலூர்
குன்னூர்
மேட்டுப்பாளையம்
சூலூர்
கவுண்டம்பாளையம்
கோயமுத்தூர் (வடக்கு)
தொண்டாமுத்தூர்
கோயமுத்தூர் (தெற்கு)
சிங்காநல்லூர்
கிணத்துக்கடவு
பொள்ளாச்சி
வால்பாறை
அரவக்குறிச்சி
கரூர்
கிருஷ்ணராயபுரம்
குளித்தலை

மண்டலப் பொறுப்பாளர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் முன்னரே விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ, திமுகவின் நான்காண்டு ஆட்சி சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்துக்கான விளம்பரங்களில் அமைச்சர் எ.வ.வேலு படத்தை இடம் பெறச் செய்துள்ளார். அண்மையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி படம், இந்த விளம்பரங்களில் இடம் பெறவில்லை.


இதேபோல ‘மண்டல செயலாளர் கே.என்.நேரு’ பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் என்ற தலைப்பிலேயே கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் நாளை கும்பகோணத்தில் நடைபெறுகிறது,

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தின் நெருக்கடியால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது திமுக தலைமை, கோவை மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமிக்க இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share