தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனின் தந்தை வேதமூர்த்தி (வயது 80) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை (செப்டம்பர் 11) காலமானார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகபுரத்தை சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவர் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வேதமூர்த்தி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மருத்துவமனையில் அவர் காலமானார்.
சென்னை கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள இல்லத்தில் வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வேதமூர்த்தியின் இறுதி சடங்குகள் நாளை (செப்டம்பர் 12) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை மறைவைத் தொடர்ந்து, மகன் சபரீசன், ஆஸ்திரியா நாட்டில் இருந்து திரும்பி வந்து கொண்டிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.