ஓசூரில் இன்று (செப்டம்பர் 11) நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் ரூ24,307 கோடி முதலீட்டுக்கான 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
சென்னையில் இருந்து ஓசூர் பேளகொண்டபள்ளி தனேஜா விமான நிலையத்துக்கு விமானம் மூலம் இன்று முற்பகல் வந்தடைகிறார் முதல்வர் ஸ்டாலின். அங்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஓசூர் தளி சாலையில் ஆனந்த் கிராண்ட் பேலஸில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் ரூ24,307 கோடி மதிப்பிலான 92 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
பின்னர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அசென்ட் சர்கியூட்ஸ் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ஓசூரில் எம்.எல்.ஏ. பிரகாஷ் இல்லத்துக்கு செல்லும் முதல்வர் ஸ்டாலின், மாலை ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.
இதன் பின்னர் கிருஷ்ணகிரியிலும் ரோடு ஷோவில் ஸ்டாலின் பங்கேற்றுவிட்டு எம்.எல்.ஏ. மதியழகன் இல்லத்தில் இரவு தங்குகிறார்.
கிருஷ்ணகிரி ஆடவர் கலை கல்லூரி விழாவில் நாளை (செப்டம்பர் 12) முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.