கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனம்- இஸ்ரேல் இடையேயான மோதல் நீடித்து வருகிறது. காஸாவில் ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிப்பதை நோக்கமாக கொண்டு இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இந்த போரில் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
காஸா மீதான இஸ்ரேலின் போரை முடிவுக்கு கொண்டு வர அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அமைதி முயற்சிகளை முன்னெடுத்து வரும் நாடுகளில் கத்தாரும் ஒன்று.
இந்த நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில், ஹமாஸ் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறி, இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலின் இந்த வான்வழித் தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கத்தார் மீதான தாக்குதல் வருத்தமளிக்கிறது; அந்நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
