சென்னை டூ குமரி வரை… போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ். பேரணி!

Published On:

| By Kavi

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று (அக்டோபர் 6) போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ்.பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி 58 இடங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போலீசாரிடம் அனுமதி கோரியது.

இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையடுத்து இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது.

கோவையில் சிவானந்தா காலனி முதல் அம்ருதா காலனி வரை பேரணி நடைபெற்றது. 300-க்கும் மேற்பட்ட சீருடை அணிந்த ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தென்காசியில் சுமார் 3 கி.மீ. தூரம் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சென்னை எழும்பூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பங்கேற்றார்.

மதுரையில் சர்வேயர் காலனியில் இருந்து புதூர் பேருந்து நிலையம் வரை பேரணி நடைபெற்றது. திருப்பத்தூர் நாட்றாம்பள்ளியில் நடந்த பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லையான களியக்காவிளை பனங்காலை பகுதியில் இருந்து படந்தாலுமூடு வரை ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடைபெற்றது.

கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோயிலில் நடைபெற்ற பேரணியில் 150 பேர் கலந்துகொண்டனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் 16 வீதிகள் வழியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் சென்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் என பல்வேறு பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேரணி நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“எல்லோரும் ஏர்ஷோவுக்கு போய்ட்டாங்க”: அதிமுக கூட்டத்தில் ஜெயக்குமார்

விண்ணில் விமானங்கள் சாதனை… மண்ணில் மக்கள் வேதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share