ADVERTISEMENT

நாய் கடித்து பறிபோகும் உயிர்கள்… சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

Published On:

| By christopher

chennai corporation warnings to dogs owners

பொது இடங்களுக்கு தடுப்பூசி செலுத்திய நாய்களை மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும் சென்னை மாநகராட்சி இன்று (ஆகஸ்ட் 20) அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரு நாய்கள் பிரச்னை சமீபத்தில் விஸ்வரூபமெடுத்து, நாடு முழுவதும் சர்ச்சையாக சென்றுக் கொண்டிருக்கிறது. இது தவிர சென்னையில் வீட்டில் வளர்க்கப்படும் பிட்புல் போன்ற தடை செய்யப்பட்ட நாய்கள் கடித்தும் பலியாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT

சென்னை குமரன் நகர் பகுதியில், பூங்கொடி என்பவர் வளர்த்து வந்த தடை செய்யப்பட்ட பிட்புல் வகை நாய் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 19) 48 வயதான கருணாகரன் என்பவரை கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வளர்ப்பு நாயான பிட்புல் கடித்ததில், பூங்கொடியும் படுகாயமடைந்த நிலையில் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாய் கடித்து பலியான கருணாகரன்

ADVERTISEMENT

அதற்கு முன்னதாக சென்னை தண்டையார்பேட்டையில் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட இதே பிட்புல் வகை நாய் கடித்து 7 வயது சிறுமி பலியான சம்பவம் பலரையும் பதற்றத்தில் ஆழ்த்தியது.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் இன்று நாய் வளர்ப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொது மக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன. செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூடி இன்றி திரியவிட்டாலோ / அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நாய் வாயை மூடியிருக்க வேண்டும்!

பொது மக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்க கூடாது. மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அந்த செல்லப் பிராணியை அழைத்து செல்லும் பொழுது மற்றவர்கள் பாதுகாப்பை கருதி அதன் வாயை மூடியிருக்க (Muzzle) செய்தும், கட்டாயம் வைத்திருக்கவும் வேண்டும். கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் கட்டி
சென்னை மாநகராட்சியில் உரிமம் மற்றும் வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.

விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டு இருக்க்க் கூடும். இதனை உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. பொது இடங்கள் அடுக்கக குடியிருப்புகளின் மின்தூக்கிகள் (Lift) ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும், மற்றவர்களுக்கு அச்சமூட்டும் வகையிலோ (அ) அசெளகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

கிரிமினல் நடவடிக்கை பாயும்!

இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) (Guidelines with respect to Pet Street Dogs and their care givers and for Residents Welfare Associations and Apartment Owners Associations இந்த விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.

இதனை மீறி உரிமம் பெறாமல் மற்றும் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித்தன்மை. பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றை பொது இடங்களில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால் அவ்வாறான நாய்கள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படியும், பொது மக்களின் உடல் / மன அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்களின் நடவடிக்கைகளின்படியும் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share