சென்னை மாநகராட்சியில் 311 காலியிடங்கள்… தேர்வு கிடையாது! நர்ஸ், லேப் டெக்னீசியன் வேலைக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

chennai corporation recruitment 2026 staff nurse lab technician vacancies

“சென்னைக்குள்ளயே ஒரு கவர்மெண்ட் வேலை கிடைச்சா நல்லா இருக்குமே… அதுவும் எந்தப் போட்டியும் இல்லாம, மார்க் அடிப்படையில வேலை கிடைச்சா சும்மாவா?” மருத்துவத் துறையில் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு, சென்னை மாநகராட்சி (Greater Chennai Corporation) ஒரு சூப்பர் செய்தியை வெளியிட்டுள்ளது.

சென்னை நகர நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (NUHM) கீழ், காலியாக உள்ள 311 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தேர்வு இல்லாத நேரடித் தேர்வு என்பதால், போட்டி குறைவாகவே இருக்கும்!

ADVERTISEMENT

காலியிடங்கள் என்னென்ன?

மருத்துவர் முதல் உதவியாளர் வரை பலதரப்பட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். மொத்தம் 311 காலியிடங்கள் உள்ளன.

ADVERTISEMENT
  • மருத்துவ அதிகாரி (Medical Officer): 15 இடங்கள்
  • ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse): 107 இடங்கள்
  • லேப் டெக்னீசியன் (Lab Technician): 20 இடங்கள்
  • ஏஎன்எம் (ANM – Auxiliary Nurse Midwife): 82 இடங்கள்
  • பார்மசிஸ்ட் (Pharmacist): 4 இடங்கள்
  • எக்ஸ்-ரே டெக்னீசியன் (X-Ray Technician): 7 இடங்கள்
  • டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO): 46 இடங்கள்

கல்வித் தகுதி:

  • ஸ்டாஃப் நர்ஸ்: பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing) அல்லது டிப்ளமோ நர்சிங் (DGNM) முடித்திருக்க வேண்டும்.
  • லேப் டெக்னீசியன்: 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், டிப்ளமோ இன் மெடிக்கல் லேப் டெக்னாலஜி (DMLT) முடித்திருக்க வேண்டும்.
  • ஏஎன்எம் (ANM): 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், இரண்டு வருட ANM பயிற்சி முடித்திருக்க வேண்டும்.
  • மருத்துவ அதிகாரி: எம்.பி.பி.எஸ் (MBBS) முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

ADVERTISEMENT

பதவிக்கு ஏற்றவாறு தொகுப்பூதியம் (Consolidated Pay) வழங்கப்படும்

  • மருத்துவ அதிகாரி: மாதம் ரூ.60,000.
  • ஸ்டாஃப் நர்ஸ்: மாதம் ரூ.18,000.
  • ஏஎன்எம் மற்றும் லேப் டெக்னீசியன் பணிகளுக்கு சுமார் ரூ.14,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு, நேர்காணல் (Interview) மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி?

இது ஆஃப்லைன் (Offline) விண்ணப்ப முறை

  • விண்ணப்பம்: சென்னை மாநகராட்சி இணையதளத்தில் (chennaicorporation.gov.in) விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, “Member Secretary, CCUHM / City Health Officer, Public Health Department, Ripon Buildings, Chennai – 600 003” என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
  • கடைசித் தேதி: ஜனவரி 5, 2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் போய்ச் சேர வேண்டும்.

சென்னை கார்ப்பரேஷன் வேலைங்கறது சும்மா இல்ல, 11 மாசம் கான்ட்ராக்ட் தானேன்னு யோசிக்காதீங்க. இங்க வேலை பார்த்த எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் ஃபியூச்சர்ல பெரிய பெரிய ஆஸ்பத்திரிகள்ல வேலை கிடைக்க உதவும். குறிப்பா நர்சிங் முடிச்சவங்க, வீட்ல சும்மா இருக்காம இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்க.

விண்ணப்பிக்க ஜனவரி 5ஆம் தேதி வரை டைம் இருந்தாலும், தபால்ல அனுப்புறவங்க இப்பவே அனுப்பிடுங்க. கடைசி நேரத்துல தபால் தாமதமானா வாய்ப்பு போயிடும். முடிஞ்சா நேர்ல போய் ரிப்பன் பில்டிங்ல (Ripon Building) கொடுக்குறது இன்னும் பாதுகாப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share