சென்னை கடற்கரை- திருவண்ணாமலை; காட்பாடி- திருப்பதி; திருவண்ணாமலை- தாம்பரம் மெமு பயணிகள் ரயில்கள் ரத்து- எப்போது?

Published On:

| By Minnambalam Desk

Memu Trains

சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை- திருவண்ணாமலை மற்றும் காட்பாடி- திருப்பதி ரயில்கள் 2 நாட்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. Chennai Beach–Tiruvannamalai, Katpadi–Tirupati, Tiruvannamalai–Tambaram MEMU Passenger Trains Cancelled – When?

காட்பாடியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரையில் இருந்து மாலை 4 மணிக்கு திருவண்ணாமலைக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில் (66033) இன்று ஜூன் 16 மற்றும் ஜூன் 18-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.

காட்பாடியில் இருந்து திருப்பதிக்கு இரவு 9.10 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில் (67210) இன்று ஜூன் 16, ஜூன் 18-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

திருப்பதியில் இருந்து காட்பாடிக்கு இரவு 7.10 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில் (67209) இன்று ஜூன் 16 மற்றும் ஜூன் 18-ல் ரத்து செய்யப்படும்.

திருவண்ணாமலையில் இருந்து தாம்பரத்துக்கு அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மெமு பயணிகள் ரயில் (66034) நாளை ஜூன் 17 மற்றும் ஜூன் 19 ஆகிய நாட்களில் ரத்து செய்யப்படும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share