ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்?

Published On:

| By vanangamudi

திருவள்ளூரில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது புகார் எழுந்தது.

இந்தவழக்கில் முன் ஜாமீன் கோரி ஜெகன் மூர்த்தி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி அரசு வாகனத்தை கடத்தலுக்கு பயன்படுத்தியதாக ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து அவரை திருவள்ளூர் மாவட்ட காவல்துறை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

ADVERTISEMENT

அரசு ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டாலோ, சிறைக்கு சென்றாலோ அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்.

இந்தநிலையில், டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், முதல்வர் அலுவலகத்திடம் ஆலோசனை செய்து விட்டு ஏடிஜிபி ஜெயராம் ஐபிஎஸ்ஸை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்கிறார்கள் காவல்துறை உயர் அதிகாரிகள். shankar jiwal discuss suspend adgp jayaram

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share