திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்ம் நிலையில் பல்வேறு ரயில் சேவைகளில் (Changes in Trichy Train Services) மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு காலை 8.35 மணிக்கு புறப்படும் டெமு ரயில் ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை திருவாரூர் வரை மட்டும் இயக்கப்படும். திருவாரூர்- காரைக்கால் இடையே மேற்கண்ட நாட்களில் டெமு ரயில் சேவை ரத்து செய்யப்படும்.
- காரைக்காலில் இருந்து புறப்பட வேண்டிய திருச்சி டெமு ரயில் ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை திருவாரூர் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும்.
- ஈரோட்டில் இருந்து காலை 8.10 மணிக்கு திருச்சிக்கு புறப்படும் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 9 ஆகிய நாட்களில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
- காரைக்குடி- திருச்சி பயணிகள் ரயில் ஆகஸ்ட் 5, ஆகஸ்ட் 19 ஆகிய நாட்களில் குமாரமங்கலம் வரை மட்டும் இயக்கப்படும்; குமாரமங்கலம் – திருச்சி இடையே 2 நாட்கள் இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படும்.
- திருச்சி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை மானாமதுரை வரை மட்டும் இயக்கப்படும்; மானாமதுரை- ராமேஸ்வரம் இடையே இந்த ரயில் சேவை ரத்து செய்யப்படும்.
- ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 11-ந் தேதி முதல் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.
- மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 10, 13 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் வழியாக செல்லாமல் திருச்சியில் இருந்து புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும்.