தமிழ்நாட்டில் இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.
காவிரி டெல்டா, சிவகங்கை, மானாமதுரை, திண்டுக்கல் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆகஸ்ட் 2-ந் தேதி நேற்று மழை கொட்டியது.
இதனைத் தொடர்ந்து கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கோவை, நீலகிரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று ஆகஸ்ட் 3-ந் தேதி மிக கனமழை பெய்யக் கூடும் என்பதற்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல், தென்காசி, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர். நாகை மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
