ADVERTISEMENT

நெல்லை திமுக மாவட்டத்தில் மாற்றம்!

Published On:

| By christopher

changes in Nellai DMK district!

நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு 2 மாவட்டங்களாக பிரித்து அதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று (செப்டம்பர் 26) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக நிர்வாக வசதிக்காகவும் கழகப் பணிகள் செம்மையுற நடைபெற்றிடவும் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டு, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்களும் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

திருநெல்வேலி மேற்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளாக அம்பாசமுத்திரம், ஆலங்குளம் நிர்ணயிக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று திருநெல்வேலி கிழக்கு மாவட்ட சட்டமன்ற தொகுதிகளாக நாங்குநேரி, ராதாபுரம் நிர்ணயிக்கப்பட்டு, அம்மாவட்டத்தின் பொறுப்பாளராக கிரகாம்பெல் நியமிக்கப்பட்டுள்ளார்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share