கோயம்புத்தூர் வடக்கு ரயில் நடைமேடையில் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி சில ரயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில் சேவைகள்
போத்தனூரிலிருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட வேண்டிய போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (எண் 66612) ஆகஸ்ட் 24ந்தேதி அன்று முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் மேட்டுப்பாளையத்திலிருந்து பிற்பகல் 1.05 மணிக்கு புறப்பட வேண்டிய மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு ரயில் (எண் 66615) வரும் ஆகஸ்ட் 24ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள்
ஆகஸ்ட் 23ந்தேதி புறப்படும் தாம்பரம் – மங்களூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் (எண் 16159) வரும் ஆகஸ்ட் 24ந்தேதி இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படும். இதனால், பீளமேடு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்காது.
இதேபோல் இன்று இயக்கப்படும் பாட்னா – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 22644) வரும் ஆகஸ்ட் 24ம் தேதி இருகூர் –போத்தனூர் வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்காது. மாற்றாக, போத்தனூர் சந்திப்பில் காலை 10:27 – 10:30 வரை நிறுத்தப்படும்.
திப்ருகர் – கன்னியாகுமாரி விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 22504) 21 ந்தேதி இயக்கப்படும் நிலையில் வரும் ஆகஸ்ட் 24ந்தேதி இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் மாற்றி இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்காது. மாறாக காலை 10:42 – 10:45 மணியளவில் போத்தனூர் சந்திப்பில் நிறுத்தப்படும்.
ஆலப்புழாவிலிருந்து காலை 06:00 மணிக்கு புறப்படும் ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 13352) வரும் ஆகஸ்ட் 24ந் தேதி போத்தனூர் – இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்காது. மாறாக, போத்தனூர் சந்திப்பில் மதியம் 12:17-12:20 மணியளவில் நிறுத்தப்படும்.
எர்ணாகுளத்திலிருந்து காலை 09.10 மணிக்கு புறப்படும் எர்ணாகுளம் – கே.எஸ்.ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 12678), வரும் ஆகஸ்ட் 24ம் தேதி போத்தனூர் – இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், கோயம்புத்தூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் நிற்காது. மாற்றாக, மதியம் 12:47 – 12:50 மணியளவில் போத்தனூர் சந்திப்பில் நிறுத்தப்படும்.
பயணிகள் இந்த மாற்றங்களைக் கவனத்தில் கொண்டு தங்கள் பயணத் திட்டங்களைத் தயாரிக்குமாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.