ADVERTISEMENT

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு ‘புராஜெக்ட் அசிஸ்டென்ட்’ வாய்ப்பு… மாதம் ரூ.25,000 சம்பளம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

CCM project assistant vacancies in Chennai Anna University

“ஐடி வேலை வேண்டாம்… நம்ம ஊர் அண்ணா யுனிவர்சிட்டியிலேயே ஒரு கௌரவமான வேலை கிடைச்சா போதும்” என்று நினைக்கும் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கிண்டி வளாகத்தில் இருந்து ஒரு சூப்பர் அப்டேட் வந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையத்தில் (Centre for Climate Change and Disaster Management – CCCDM) காலியாக உள்ள ‘திட்ட உதவியாளர்’ (Project Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

வேலை என்ன?

காலநிலை மாற்றம் தொடர்பான ஆராய்ச்சிகள், தரவுகளைச் சேகரித்தல் மற்றும் ஆவணப்படுத்துதல் போன்ற பணிகள். இது ஒரு தற்காலிகப் பணி (Temporary Basis) என்றாலும், அண்ணா பல்கலைக்கழகச் சான்றிதழ் என்பது எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு ஒரு பெரிய ‘விசிட்டிங் கார்டு’ போல உதவும்.

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இதற்கு விண்ணப்பிக்கச் சில குறிப்பிட்ட படிப்புத் தகுதிகள் அவசியம்:

ADVERTISEMENT
  • இளநிலை: பி.இ / பி.டெக் (B.E / B.Tech) சிவில் இன்ஜினியரிங் (Civil) அல்லது ஜியோ இன்ஃபர்மேட்டிக்ஸ் (Geo Informatics) முடித்திருக்க வேண்டும்.
  • முதுநிலை: எம்.இ / எம்.டெக் (M.E / M.Tech) படிப்பில் ரிமோட் சென்சிங் (Remote Sensing), ஜிஐஎஸ் (GIS), சுற்றுச்சூழல் பொறியியல் (Environmental Engineering) போன்ற பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • முக்கியத் தகுதி: குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடம் வரை பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?

தேர்வு செய்யப்படும் நபர்களுக்குத் தகுதி மற்றும் அனுபவத்தைப் பொறுத்து மாதம் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை தொகுப்பூதியம் (Consolidated Pay) வழங்கப்படும்.

தேர்வு முறை:

பெரிய அளவில் எழுத்துத் தேர்வுகள் எதுவும் கிடையாது. விண்ணப்பதாரர்களின் தகுதியை வைத்துப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள். அங்குத் திறமையை நிரூபித்தால் வேலை உறுதி!

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் அப்ளை செய்ய முடியாது. தபால் மூலமாகவே விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

  • அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
  • தேவையான கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களை இணைக்கவும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

The Director,

Centre for Climate Change and Disaster Management,

Anna University, Chennai – 600 025.

கடைசி தேதி:

விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டிய கடைசி நாள்: ஜனவரி 2, 2026 (மாலை 5 மணிக்குள்).

“அரசு வேலை கனவுல இருக்கிறவங்க, சும்மா வீட்ல இருக்காம இது போன்ற ப்ராஜெக்ட்ல சேர்ந்தா, படிப்புக்கும் ஆச்சு… பாக்கெட் மணிக்கும் ஆச்சு!” உடனே அப்ளை பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு www.annauniv.edu இணையதளத்தில் உள்ள ‘Recruitment’ பகுதியைச் சென்று பார்க்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share