2026 முதல் ஆண்டுக்கு இரண்டு முறை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) முடிவெடுத்துள்ளது. CBSE Public exams to be held twice
மாணவர்களுக்கு தேர்வு சம்பந்தப்பட்ட அழுத்தங்களை குறைப்பதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு எழுத வாய்ப்பு தர வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை பரிந்துரை செய்கிறது.
இந்தநிலையில் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் , வரும் 2026 கல்வி ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இருமுறை தேர்வு நடத்தப்படும் முதல் தேர்வு பிப்ரவரியில் நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் முடிவு வெளியாகும். இந்த தேர்வை மாணவர்கள் கட்டாயம் எழுத வேண்டும்.
இரண்டாம் கட்ட தேர்வு மே மாதம் நடைபெறும். இதன் முடிவு ஜூனில் வெளியாகும். இரண்டாம் கட்ட தேர்வை எழுதுவது மாணவர்களின் விருப்பம்தான்” என்று கூறியுள்ளார்.
அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழி பாடங்களில் மாணவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்த அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண் வருகிறதோ அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். உள் மதிப்பீடு தேர்வு ஒரே ஒரு முறைதான் நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த பிப்ரவரியில் வரைவு விதிமுறைகளை சிபிஎஸ்இ வெளியிட்டு, பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் பிற பங்குதாரர்களிடமிருந்து கருத்துகளை வரவேற்றது. இந்த கருத்துகளின் அடிப்படையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. CBSE Public exams to be held twice