“ஆன்லைன் கிளாஸ் புரியல… மீண்டும் பார்த்து படிக்க முடியுமா?”, பல ஸ்டூடன்ட்ஸ்க்கும் இந்த பிரச்சனை இருக்கும். அதற்குத்தான் இப்போது CBSE ஒரு புதிய அப்டேட் கொண்டு வந்திருக்கிறது.
CBSE போர்டு கீழ் உள்ள பள்ளிகளுக்கு, ‘PM இ-வித்யா’ (PM EVidya)டிடிஎச் கல்வி டிவி சேனல்கள் மூலம் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று முக்கிய சர்குலர் வெளியிட்டுள்ளது. இந்த டிஜிட்டல் லேர்னிங் முயற்சியை பள்ளிகள் கட்டாயம் யூஸ் பண்ணணும் என்று CBSE கூறியுள்ளது.
முக்கியமாக PM இ-வித்யா “CBSE-15” சேனல் மூலம் பாடங்கள் ஒளிபரப்பாகின்றன. ஆசிரியர்கள் இந்த வீடியோக்களை தினசரி பாடத் திட்டத்தில் சேர்த்து ஸ்டூடன்ட்ஸ்க்கு கற்பிக்கலாம்.
PM இ-வித்யா திட்டம் – என்ன இது?
இந்த திட்டத்தை மத்திய அரசு 2024-ஆம் ஆண்டு தொடங்கியது.
- இந்தியா முழுவதும் 200 டிடிஎச் கல்வி டிவி சேனல்கள்
- டிவி மற்றும் ஆன்லைன் வீடியோக்கள் மூலம் பாடங்கள்
- இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கும் கல்வி கிடைக்க ஏற்பாடு
இந்த திட்டத்தின் நோக்கம் — தரமான கல்வி எல்லா மாணவர்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதுதான்.
CBSE-15 சேனல் – என்னென்ன இருக்கும்?
CBSE-க்கு தனியாக “சேனல் 15” ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த சேனலில் தற்போது:
- 67 கல்வி வீடியோக்கள்
- மாணவர்களுக்கான பாடங்கள்
- ஆசிரியர்களுக்கான ட்ரெயினிங் வீடியோக்கள்
இந்த வீடியோக்கள் CBSE சில்லபஸ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டவை.
மாணவர்களுக்கு கிடைக்கும் பாடங்கள்
இந்த டிவி சேனலில் முக்கியமாக:
- கணிதம் (Mathematics)
- அறிவியல் (Science)
- சமூக அறிவியல் (Social Science)
போன்ற பாடங்கள் இடம்பெறும்.
மேலும் சில முக்கிய கற்றல் முறைகளும் சேர்க்கப்பட்டுள்ளன:
- கதை சொல்லுதல் மூலம் கற்பித்தல்
- கலை ஒருங்கிணைந்த கற்றல்
- செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிமுகம்
இதன் மூலம் ஸ்டூடன்ட்ஸ் பாடங்களை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர்களுக்கும் பெரிய அப்டேட்
இந்த திட்டம் ஸ்டூடன்ட்ஸ்க்கு மட்டும் இல்லை.
ஆசிரியர்களுக்கும் பல ட்ரெயினிங் காணொளிகள் இருக்கின்றன:
- பாடம் எப்படிக் கற்பிப்பது
- லெசன் பிளானிங்
- கூட்டுக் கற்றல் முறைகள்
- NEP 2020 கல்வி கொள்கை விளக்கங்கள்
இதனால் ஆசிரியர்கள் தங்களின் டீச்சிங் ஸ்கில்ஸையும் மேம்படுத்தலாம்.
பள்ளிகளுக்கு CBSE கொடுத்த முக்கிய உத்தரவு
CBSE சர்குலரில் கூறியிருப்பது:
- பள்ளிகள் இந்த வீடியோக்களை கிளாஸ்ரூமில் பயன்படுத்த வேண்டும்
- ஆசிரியர்கள் லெசன் பிளானில் சேர்க்கலாம்
- மாணவர்கள் சந்தேகங்களை தீர்க்க மீண்டும் மீண்டும் பார்க்கலாம்
பள்ளி முதல்வர்கள் இந்த வசதியை பயன்படுத்த தேவையான இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதை கவனிங்க:
பாஸ், இந்த அப்டேட்டை லைட்டா எடுத்துக்காதீங்க.
- டிவியில் வரும் பாடங்களை ரெகுலரா செக் பண்ணுங்க
- புரியாத டாப்பிக்ஸ் மீண்டும் பார்க்கலாம்
- எக்ஸாம் பிரிபரேஷனுக்கு இது பெரிய ஹெல்ப்
