ADVERTISEMENT

பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ (CBSE) கிடுக்கிப்பிடி… “எல்லாத்தையும் ஓப்பனா சொல்லணும்”… பெற்றோர்களுக்கு ‘ஜாக்பாட்’ செய்தி!

Published On:

| By Santhosh Raj Saravanan

cbse issues strict notice mandatory public disclosure affiliated schools

“ஸ்கூல் பீஸ் எவ்ளோன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறாங்க… ஸ்கூல்ல வசதி எப்படி இருக்குன்னு உள்ள போய் பார்க்கவும் விட மாட்டேங்குறாங்க… என் பையனை நம்பி சேர்க்கலாமா?” என்று குழம்பித்தவிக்கும் பெற்றோரா நீங்கள்? உங்களுக்கு ஒரு சூப்பர் செய்தி!

பெற்றோர்களிடமிருந்து விவரங்களை மறைக்கும் தனியார் பள்ளிகளுக்குக் கடிவாளம் போடும் வகையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தற்போது ஒரு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT

எல்லாமே ‘வெள்ளை அறிக்கை’: இனி எந்த ஒரு சிபிஎஸ்இ பள்ளியும், “இது எங்க ரகசியம்” என்று எதையும் மறைக்க முடியாது. பள்ளி தொடர்பான அத்தனை விவரங்களையும் (Mandatory Public Disclosure) அந்தந்தப் பள்ளியின் இணையதளத்தில் (Website) பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். இதற்காகப் பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ‘Mandatory Public Disclosure’ என்ற பெயரில் தனியாக ஒரு லிங்க் (Link) கொடுக்க வேண்டும்.

என்னென்ன விவரங்கள் இருக்க வேண்டும்? சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள ‘அப்பண்டிக்ஸ்-IX’ (Appendix-IX) படிவத்தின்படி, கீழ்க்கண்ட விவரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும்:

ADVERTISEMENT
  • கட்டண விவரம் (Fee Structure): பள்ளியில் வசூலிக்கப்படும் முழுக் கட்டண விவரம். (இனி அட்மிஷன் போடும்போது ஒரு ரேட், சேர்ந்த பிறகு ஒரு ரேட் என்று ஏமாற்ற முடியாது).
  • கட்டமைப்பு (Infrastructure): வகுப்பறைகளின் அளவு, ஆய்வகங்கள் (Labs), நூலக வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் இணைய வசதி விவரங்கள்.
  • பாதுகாப்புச் சான்றிதழ்கள்: தீயணைப்புத் துறை சான்றிதழ் (Fire Safety), கட்டிட உறுதித்தன்மைச் சான்றிதழ் (Building Safety), சுகாதாரம் மற்றும் குடிநீர்ச் சான்றிதழ் ஆகியவை காலாவதியாகாமல் இருக்கிறதா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
  • ஆசிரியர்கள் விவரம்: பள்ளியில் எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர்? அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள்? (தகுதியற்ற ஆசிரியர்கள் பாடம் எடுப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை).
  • மாணவர் எண்ணிக்கை: ஒவ்வொரு வகுப்பிலும் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்? செக்‌ஷனுக்கு எத்தனை பேர்? என்ற விவரங்கள்.

கடைசி எச்சரிக்கை (Final Deadline): பல பள்ளிகள் இன்னும் இந்த விவரங்களை முழுமையாக இணையதளத்தில் பதிவேற்றவில்லை என்று சிபிஎஸ்இ வாரியத்திற்குக் புகார்கள் சென்றுள்ளன. அதனால், “இதுதான் கடைசி வாய்ப்பு. இன்னும் 30 நாட்களுக்குள் அனைத்து விவரங்களையும் பதிவேற்ற வேண்டும்” என்று சிபிஎஸ்இ ஸ்ட்ரிக்ட் ஆகச் சொல்லியிருக்கிறது.

மீறினால் என்ன நடக்கும்? இந்தக் காலக்கெடுவுக்குள் விவரங்களை வெளியிடாத பள்ளிகள் மீது, சிபிஎஸ்இ இணைப்பு விதிகள் (Affiliation Bye-Laws – Chapter 12)-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால், அந்தப் பள்ளியின் அங்கீகாரம் (Affiliation) ரத்து செய்யப்படும் அபாயமும் உள்ளது. எனவே, பள்ளிகள் இனி தப்பிக்கவே முடியாது!

ADVERTISEMENT

பெற்றோர்களே… இனி ஸ்கூல்ல போய் ‘பீஸ் எவ்ளோ?’னு கேட்டு கெஞ்ச வேண்டாம். நீங்க சேர்க்கப்போற ஸ்கூல் வெப்சைட்ல போய் ‘Mandatory Public Disclosure’ லிங்க் இருக்கானு பாருங்க. அதுல அந்தப் பள்ளியோட ஜாதகமே இருக்கும்! முக்கியமா, உங்க குழந்தைக்குப் பாடம் எடுக்குற டீச்சர்ஸ் தகுதியானவங்க தானா? அந்தக் கட்டடத்துக்கு ‘பில்டிங் ஸ்ட்ராங்’ சர்டிபிகேட் இருக்கானு நீங்களே செக் பண்ணிக்கலாம். இந்த வசதியைப் பயன்படுத்தி, ஏமாறாம சரியான பள்ளியைத் தேர்ந்தெடுங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share