கரூரில் 39 பேர் உயிரிழந்த நிலையில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் விஜய் கலந்து கொண்ட தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி, மரணம் விளைவிக்கும் செயல் செய்தல், பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மீது கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது-