விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கு

Published On:

| By Mathi

vijay

சென்னையில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் விஜய் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இதனையடுத்து பெரம்பூர், கொளத்தூர் சட்டசபை தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்தார் விஜய்.

ADVERTISEMENT

அதேநேரத்தில் வில்லிவாக்கத்தில் திட்டமிட்டிருந்த விஜய் தேர்தல் பிரசாரமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிரசாரம் செய்த போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக விஜய் மீது 5 பிரிவுகளில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share