சென்னை பெருநகரப் போக்குவரத்து ஆணையம் நேற்று (மார்ச் 13) வெளியிட்ட புதிய பார்க்கிங் திட்டத்தில், இனி சென்னையில் கார் வாங்குபவர்கள் தங்களிடம் காரை பார்ங்கிங் செய்யும் வசதி குறித்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.car parking issue in chennai
சென்னையில் பலரும் கார் வாங்கிவிட்டு, பார்க்கிங் செய்ய இடமில்லாமல் சிரமப்படுவதை பரவலாக காண முடிகிறது. கடந்த 2022 கணக்கெடுப்பின்படி சென்னையில் சுமார் 60 லட்சம் கார்கள் இருந்ததாக ஆய்வு சொல்கிறது. இப்போது கண்டிப்பாக அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும்.
இவற்றில் பெரும்பாலான கார்கள் சாலையோரங்களில்தான் நிறுத்தப்படுகின்றன. சென்னையில் கிட்டத்தட்ட சுமார் 30 லட்சம் கார்களுக்கு பார்க்கிங் வசதியே இல்லை. இதையடுத்து, பார்க்கிங் வசதி இருந்தால்தான் கார் வாங்க முடியுமென்கிற நிலையை பெருநகர போக்குவரத்து ஆணையம் உருவாக்கியுள்ளது.car parking issue in chennai
இது குறித்து சென்னைப் போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஜெயக்குமார் கூறுகையில் , “சிலரிடம் ஒரு காரை பார்க் செய்வதற்கு மட்டுமே வசதி இருக்கும். ஆனால், அவர்கள் மூன்று கார் வாங்கியிருப்பார்கள். மற்ற இரு கார்களும் தெருவில் நிறுத்தி வைத்திருப்பார்கள். இது போக்குவரத்துக்கு இடைஞ்சல் மட்டுமல்லாமல் சுற்றுப்புறத்துக்கும் பிரச்னையை ஏற்படுத்துகிறது. புதிய முடிவால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும்” என்று கூறியுள்ளார்.