ADVERTISEMENT

புதுச்சேரிக்கு ‘மாநில அந்தஸ்து’ கோரி ஜூலை 27-ல் டெல்லியில் போராட்டம்!

Published On:

| By Minnambalam Desk

Puducherry

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் ஜூலை 27-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழு தலைவர் நேரு தெரிவித்துள்ளார். Puducherry

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில அந்தஸ்து போராட்ட குழுவின் தலைவர் நேரு எம்.எல்.ஏ, புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இது தொடர்பாக புதுச்சேரி சட்டமன்றத்தில் 16 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது.

ADVERTISEMENT

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர், முதல்வர், தலைமை செயலாளர் என 3 அதிகார மையங்கள் செயல்படுகின்றன. இதனால் மக்களுக்கான திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக ஜூலை 27-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெறும் என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share