தொழில் உரிமம் வழங்கும் விதியில் தமிழக அரசு திருத்தம் செய்துள்ளது. Business license in one day
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் விதிகள் 2023 விதி 289(1) ன்படி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தொழில்புரிவோர் கட்டாயம் தொழில் உரிமம் பெற வேண்டும்.

இந்தநிலையில் நகர்புறங்களில் 500 சதுர அடி வரை உள்ள கடைகளுக்கு சுய சான்று அடிப்படையில் ஒரே நாளில் தொழில் உரிமம் வழங்க இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உணவு விற்பனை கடைகள் தவிர்த்து மற்ற கடைகளுக்கு இது பொருந்தும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக எடுக்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் தொழில் உரிமங்கள் மூன்று ஆண்டுகள் வரை செல்லத்தக்கவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. Business license in one day