முன்பதிவில் அசத்தும் ஜேம்ஸ் கேமரூன் ஹாலிவுட் படம்!

Published On:

| By Minnambalam Desk

உலக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஹாலிவுட் படம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ .

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் புகழ்பெற்ற அறிவியல் புனைகதை சீரிஸின் மூன்றாவது பாகமான இந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

20 யத் செஞ்சுரி ஸ்டுடியோஸ் இந்த படத்தை டிசம்பர் 19 ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியீடு செய்கிறது. பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், 1 மில்லியனுக்கும் அதிகமான (1.2 + மில்லியன் ) இந்தியர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.

முன்பதிவுகளில் ‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படம் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

‘அவதார்: ஃபயர் & ஆஷ்’ திரைப்படத்தில் சாம் வொர்திங்டன் (ஜேக் சல்லி) மற்றும் ஜோ சல்டானா (நெய்திரி) உள்ளிட்ட கதாபாத்திரங்கள் மீண்டும் வருவதோடு புதிய கதாபாத்திரங்களும் அறிமுகமாகிறது. கதையின் புதிய நடிகர்களில் ஊனா சாப்ளின், ‘ஆஷ் பீப்பிள்’ குலத்தின் தலைவரான வராங்காக நடிக்கிறார்.

ஜேம்ஸ் கேமரூன் அண்ணாச்சி எடுத்த டைட்டானிக் படத்தில் அந்தக் கப்பல்மூழ்கி இருக்கலாம். அனால் அவரது மார்க்கெட் கப்பல் மூழ்காமல் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ADVERTISEMENT

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share