சென்னை பனையூர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று (செப்டம்பர் 28) காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததை அடுத்து நிபுணர்கள் அங்கு விரைந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அடுத்தடுத்து விடுக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.
நேற்று கடந்த 27ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், பின்னர் சோதனை செய்ததில் அது புரளி என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் 40 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு விஜய் பனையூர் வீட்டில் போலீசார் பாதுகாப்புடன் உள்ளார். இந்த நிலையில் டிஜிபி அலுவலகத்திற்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று அங்கு சோதனை நடத்தி வருகின்றனர்.
இதுதவிர சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் ஆகிய அலுவலகங்களுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு தூதரகங்களிலும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.