அதிமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மோப்ப நாய் உதவியுடன் நடத்திய சோதனையில் அது புரளி என கண்டறியப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக, நேற்று இரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இமெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் ராயப்பேட்டை போலீசார் தீவிர சோதனையில், அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. எனினும் இமெயில் அனுப்பியவர் குறித்து ராயப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.