தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய அழைப்பு.. பாஜக நிர்வாகி ஏ.என்.எஸ். பிரசாத் கட்சி பதவி பறிப்பு!

Published On:

| By Mathi

BJP ANS Prasad

அதிமுக- பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக தலைவர் விஜய் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்த நிலையில் பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ். பிரசாத் நீக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய்யின் தவெகவை இணைப்பதற்காக நடிகர் பவன் கல்யாண் மூலமாக மத்திய அமைச்சர் அமித்ஷா முயற்சித்து வருவதாகவும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைந்தால் முதல்வர் பதவியை இரண்டரை ஆண்டுகள் விஜய்யும் எடப்பாடியும் பங்கிட்டுக் கொள்ளலாம் என பேசப்பட்டு வருவதாகவும் நமது மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்துள்ளோம்.

ADVERTISEMENT

இதனிடையே “தமிழகத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்” என பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் A.N.S.பிரசாத், இப்பொழுது முதல் அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

ADVERTISEMENT

மேலும், சட்டமன்ற தேர்தல் மாநில பணிக்குழுவில் அவருக்கு அளிக்கப்பட்ட ஊடகத்துறை பொறுப்பாளர்
என்ற பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share