திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டசபை தொகுதியை (Palani Constituency) தங்கள் கட்சிக்கு ஒதுக்க கோரி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், பழனி, வேடசந்தூர் தொகுதிகளில் அதிமுகவே போட்டியிடுகிறது. திண்டுக்கல்லில் சி. சீனிவாசன், நத்தத்தில் நத்தம் விஸ்வநாதன் வேட்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு பழனி பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழனியில் பாஜக அலுவலகத்தின் முன்பாக அக்கட்சி நிர்வாகிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பழனி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க கோரி ‘தேங்காய்’ உடைப்பு போராட்டத்தையும் அக்கட்சியினர் நடத்தினர். அப்போது பாஜக தொண்டர் ஒருவர் திடீரென மரத்தில் ஏறி, ‘தற்கொலை’ செய்யப் போவதாக மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
