“முருகா என்றதும் உருகாதா வாக்காளர் மனம்?” பாஜக ஏக்கம்!

Published On:

| By Kavi

ராஜன் குறை Madurai Murugn Manadu

முருகன் மாநாடும், முற்றும் கூட்டணி முரண்களும்

பாரதீய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் தரையில் விழுந்த மீன். ஒரு வித்தியாசம் என்னவென்றால் தொடர்ந்து துள்ளிக் கொண்டே இருக்கும் – ஆனால் நடக்கவும் முடியாது; நீந்தவும் முடியாது. அது பல்வேறு மாநிலங்களில் பல கட்சிகளை அரவணைத்து, உடைத்து, சிதைத்து கபளீகரம் செய்து ஆட்சியைப் பிடிப்பது, அல்லது ஆட்சியில் பங்கேற்பது போல அ.இ.அ.தி.மு.க-வை உள்வாங்கலாம் என முயற்சிப்பதை எல்லா அரசியல் பார்வையாளர்களும் கூறுகிறார்கள். Madurai Murugn Manadu

எடப்பாடி பழனிசாமியும் அ.இ.அ.தி.மு.க-வை யாரும் கபளீகரம் செய்ய முடியாது என்று சூளுரைக்கிறார். முயற்சி நட்ப்பது உண்மைதான் எனத் தெரிகிறது. பொதுவாக பாஜக அ.இ.அ.தி.மு.க-வை பெருமளவு சேதப்படுத்துகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதன் மூலம் தானும் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதுதான் பாஜக-வின் சோகம். காரணம், நூறாண்டுகால திராவிட அரசியலின் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் எஃகுக் கோட்டை போல எழுந்து நிற்கிறது; அதனுடன் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள், இந்தியா கூட்டணி கட்சிகள், வலுவாக இணைந்து நிற்கின்றன. Madurai Murugn Manadu

ஜெயலலிதாவும், கலைஞரும் அடுத்தடுத்து மறைந்தவுடன் அரசியல் வெற்றிடம் என்றார்கள். ஆனால் தி.மு.க தலைமை வெற்றிடமாகவில்லை; ஐம்பதாண்டுகால அரசியல் பயிற்சி கொண்ட கலைஞரின் வாரிசு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதனை வெற்றியின் இடமாக்கிவிட்டார். அ.இ.அ.தி.மு.க-தான் சந்தர்ப்பவாத, சுயநல அரசியல் முகவர்களின் முகாமாக இருந்ததால் யார் வாரிசு என்ற குழப்பம் இருந்தது. அது தனக்கான அரசியல் வாய்ப்பு என்று பாஜக நினைத்தது. நினைத்ததில் தவறில்லை. அந்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதில்தான் அவர்களுக்கு எந்தத் தெளிவும் இருக்கவில்லை.

சுப்ரமணியம் சுவாமி சசிகலாவுடனேயே கூட்டணி அமைக்கலாம் என்று அறிவுரை கூறினார். ஆனால் டில்லி அரசியல் சாணக்கியர்கள் அ.இ.அ.தி.மு.க-வில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய வேறொரு தலைமையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார்கள்; ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் என்ற இரட்டைத் தலைமைக் குழப்பத்தை உருவாக்கினார்கள். இடையில் குருமூர்த்தி ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபாவைக் கூட வாரிசாக்கலாம் என்று முயற்சித்தார்கள். ஆளாளுக்குக் குட்டையைக் குழப்பியதில் அ.இ.அ.தி.மு.க பலவீனமடைந்துதான் மிச்சமே தவிர, பாஜக-விற்கு அதனால் பெரிய ஆதாயம் எதுவுமில்லை. Madurai Murugn Manadu

அடிப்படையில் பாஜக-வின் பிரச்சினை என்னவென்றால் அது அ.இ.அ.தி.மு.க கூட்டணியுடன் திருப்தியடைய வேண்டுமா, அல்லது தானே நேரடியாக அ.இ.அ.தி.மு.க-வை பதிலீடு செய்ய வேண்டுமா என்பதுதான். அவர்களுடைய ஆசை, மனப்பூர்வமான விருப்பம் மாநிலக்கட்சிகளையே முற்றிலும் அகற்றி விட்டு பாஜகவே ஆள வேண்டும் என்பதுதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த திராவிடம் என்ற வார்த்தையே அரசியலில் ஒலிக்காமல் செய்ய வேண்டும். ஆனால் நூறாண்டுகாலமாக ஆழமாக, அகலமாக வேரூன்றிய திராவிட-தமிழ் மக்கள் தொகுதிதான் தமிழ்நாடு என்ற மனோவியலை நீக்குவது சாத்தியமில்லை. தமிழ் என்பதை வைத்துக்கொண்டு திராவிடத்தை நீக்கிவிடலாம் என விரும்புகிறார்கள். ஆனால் திராவிடம் என்பதே தமிழின் பண்பாட்டுக் கேடயம், ஆரிய வர்ண தர்மத்தை, பார்ப்பனீயத்தை முறியடிக்கும் கேடயம் என்பதை உணர்ந்த தமிழ்நாட்டு அரசியலில் அவர்கள் முயற்சி பலிப்பதில்லை. Madurai Murugn Manadu

சீமான் மூலம் திராவிடம், பெரியார் மீது கடும் தாக்குதலைத் தொடுத்துப் பார்த்தார்கள். முடியவில்லை. விஜய் திராவிடம் பேசாமலிருந்தால் பரவாயில்லை என்று நினைக்கலாம். ஆனால் அவரும் கட்சிப் பெயரில் திராவிடம் இல்லையே தவிர பெரியார், அம்பேத்கர் படங்களை தூக்கிப் பிடிக்கிறார். மேலும் அரசியல் கத்துக்குட்டியான அவரை வைத்துக்கொண்டு எந்த அளவு பயணம் செய்ய முடியும் என்பதும் அவர்களுக்குத் தெளிவாக இல்லை. விஜய் பாஜக-வை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க-விற்கு மாற்றாக தன்னை நிறுத்திக் கொள்ள வேண்டுமா, அல்லது தி.மு.க-வை எதிர்ப்பதன் மூலம் அ.இ.அ.தி.மு.க-விற்கு மாற்றாக நிறுத்திக் கொள்ள வேண்டுமா என்பதிலேயே இன்னும் தெளிவில்லை. அதற்குள்ளாகவே அவரை என்.டி.ஏ கூட்டணிக்கு பாஜக அழைக்கத் துவங்கிவிட்டது.

பாரதீய ஜனதா கட்சிக்கு ஏதோ ஒரு யுத்த தந்திரம், செயல் தந்திரம் எல்லாம் வகுக்கும் சிறப்பான ஆற்றல் இருக்கிறது என்று பலரும் நினைக்கிறார்கள். இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை. உத்தரப் பிரதேசத்திலும், பீஹாரிலும் அவர்கள் சில ஒட்டு வேலைகள் செய்து தேர்தல் வெற்றிகளை ஈட்டிவிட்டதால் அவர்கள் பெரிய சாணக்கியர்கள் என்றாகிவிடாது. நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேசம் அவர்களுக்குப் பெரிய அடியைத் தந்தது. அடிப்படையில்  பெருமுதலாளிகள் ஆதரவுக் கட்சியான அவர்கள், முஸ்லீம் வெறுப்பு, பாகிஸ்தான் பகையுணர்வு தேசபக்தி ஆகியவற்றை வைத்துக்கொண்டு ஏழை, எளிய மக்களை இந்து அடையாளத்தின் கீழ் அணிதிரட்டிவிடலாம் என்று நம்புகிறார்கள்.

இந்த பாசிச வேலைத்திட்டம், மனோவியல் சங் பரிவார அமைப்புகளிடம் சிறப்பாக உருவாகியுள்ளது. ஆனால் மக்களிடையே முழுமையாக எடுபடுவதில்லை. அதனால் கர்நாடகா, மஹாராஷ்டிரம், வங்காளம் என பல இடங்களிலும் ஜான் ஏறினால், முழம் சறுக்குகிறது. ஆந்திராவில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்தான் ஒய்.எஸ்.ஆரை சந்திரபாபு நாயுடுவை வைத்து ஓரம் கட்டியுள்ளார்கள்; பீஹாரில் இந்த முறையும் தேய்ந்துபோன நிதீஷ் பிம்பத்தை வைத்து தேஜஸ்வி யாதவை வெல்ல முடியுமா என்று தெரியவில்லை.

இந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டில் அவர்கள் நடத்திய முருகன் மாநாட்டையும், அதனைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க-வுடன் ஏற்பட்டுள்ள புதிய முரண்களையும் காண வேண்டும். இந்த மாநாட்டை பாஜக நடத்தவில்லை, இந்து முன்னணி நட த்தியது என்றெல்லாம் ஏதேனும் பசப்புவார்கள். இந்து முன்னணி, பாஜக எல்லாம் ஆர்.எஸ்.எஸ் நிர்வகிக்கும் அமைப்புகள் என்பதால் இது போன்ற பசப்பல்களில் பொருளில்லை. அதனால் இந்த மாநாட்டு நிகழ்வுகளைக் கவனமாக ஆராய்ந்தால் அவர்களுக்கு தேர்தலில் வெற்றியடையும் நோக்கமே இல்லையோ என்றுதான் தோன்றுகிறது. சில முக்கிய அம்சங்களைப் பரிசீலிப்போம். Madurai Murugn Manadu

முருக பக்தி மீது பாஜக லேபிளை ஒட்ட முடியுமா? Madurai Murugn Manadu

தமிழ்நாட்டில் வெகுகாலமாக மக்கள் வழிபாட்டில் நிலைபெற்ற கடவுள் முருகன். சங்க இலக்கிய தொகுப்பான பத்துப்பாட்டிலேயே திருமுருகாற்றுப்படை இருக்கிறது. பிற இந்திய மாநிலங்கள் எதிலும் தமிழ்நாடு அளவிற்கு முருக வழிபாடு கிடையாது. வட நாட்டில் இரண்டு மூன்று கார்த்திகேயன் கோயில்கள் உள்ளன என்றாலும் அவை பிரபலமான தலங்கள் அல்ல. மாறாக தொன்றுதொட்டு முருகன் வழிபாடு தமிழ்நாட்டில் நீடித்திருப்பதாகவே தெரிகிறது. Madurai Murugn Manadu

சமகாலத்திற்கு வந்தால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான புகழ்பெற்ற இசைநாடகம் வள்ளி திருமணம்தான். இருபதாம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகளில் தினைப்புனம் காத்துவந்த வள்ளியின் மீது முருகன் காதல் கொண்டதையும், அண்ணன் விநாயகர் துணையுடன் கரம் பற்றியதையும் சலிக்கச் சலிக்க தமிழ் மேடைகளில் பாடி நடித்திருக்கிறார்கள். திரைப்படமும் எடுத்துள்ளார்கள். தைப்பூசம் வந்தால் பழினி உள்ளிட்ட தலங்களை நோக்கி கிராமங்களிலிருந்து மக்கள் படை, படையாக காவடி ஏந்தியும், அலகு குத்தியும் நடை பயணம் செல்வார்கள். பிரம்மாண்டமான பண்பாட்டு நிகழ்வு இது. காலம் காலமாக நிலவி வரும் இந்த முருக பக்தியின் மீது, சங்க பரிவாரம் எப்படி தன் லேபிளை திடீரென ஒட்ட முடியும்? Madurai Murugn Manadu

முருகன் மாநாட்டிலேயே பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாண்டோ சின்னப்ப தேவரின் தெய்வம் (1972) படத்தில் கண்ணதாசன் எழுதி, குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்து, மதுரை சோமு பாடிய “மருதமலை மாமணியே முருகையா” பாடலிலிருந்துதான் சில வரிகளைப் பாடினார். இந்த பாடல் ஒலிக்காத இடமே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. ஏற்கனவே அனைத்து மக்களும் உணர்வுபூர்வமாக அறிந்த இந்த பாடலின் மூலம் எப்படி புதிதாக ஒரு இந்து அரசியல் அடையாளத்தை உருவாக்க முடியும் என்பது கேள்வி. Madurai Murugn Manadu

திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய அரசியல் வெற்றிகளைக் குவித்த போதுதான் முருக பக்தியும் வெகுஜன கலாசாரத்தில் ஆறாக பெருகி ஓடியது. இரண்டிற்கும் எந்த முரணும் இருக்கவில்லை. முருக பக்தியின் உச்சபட்ச வெளியீடாக விளங்கிய திருமுருக கிருபானந்த வாரியார் அண்ணா பிறந்த நாளில் கலைஞருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டு அண்ணாவின் நினைவினை, சிறப்புகளைப் போற்றிப் பேசியுள்ளார். அப்போது கலைஞர் கிருபானந்த வாரியரைப் பாராட்டியது அவர் தமிழுக்காக. திராவிட இயக்கம் தமிழ், தமிழ் பண்பாடு என்ற அளவில் முருக வழிபாட்டை அனுசரித்தே வந்துள்ளது. நடிகவேள் எம்.ஆர்.ராதாவே குமுதம் பத்திரிகைக்காக கிருபானந்த வாரியாரை சந்தித்துப் பேசியுள்ளார். மிகவும் சுவாரசியமான அந்த உரையாடலில் அவரவர் வழியில் சமூக நன்மைக்கு இயங்குவதாக நடிகவேள் வாரியாரிடம் கூறியது கருதத்தக்கது.

எம்.ஜி.ஆரை வைத்து பல படங்கள் தயாரித்த அவர் நண்பர் சாண்டோ சின்னப்ப தேவர்தான் மருதமலை முருகன் கோயிலை முக்கியத் தலமாக மாற்றியவர். தமிழ் பொதுமன்றத்தில் முருக பக்திக்கும் திராவிட இயக்கத்திற்கு எந்த முரணும் இல்லாததுடன், இணையுறவும் இருந்திருக்கும் சூழலில் திராவிட அரசியலுக்கு எதிராக முருக பக்தியை கையிலெடுத்து “இந்துக்களை ஒருங்கிணைக்க” பாஜக முயற்சிப்பது சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. இதன் உச்சகட்டமாக நயினார் நாகேந்திரன் பாடி முடித்தவுடன் அறிவிப்பாளர் அதனை மதுரை முத்து பாடிய பாடல் என்று சொல்ல, மேடையில் இருப்பவர்கள் பதறிப் போய் மதுரை சோமு என்று திருத்தினார்கள். பாடலில் மெய்மறந்து போனதால் தவறாக சொன்னதாகச் சொல்லி சமாளித்தார் அவர். Madurai Murugn Manadu

அ.இ.அ.தி.மு.க திராவிட கட்சியா? இல்லையா? பாஜக தீராக் குழப்பம்

பாஜக-வின் நோக்கம் திராவிடவிய அரசியல் கடவுள் மறுப்பைக் கொண்டது என்பதால் அது இந்துக்களுக்கு எதிரானது என்று கூறுவதன் மூலம் இந்துக்களை அணிதிரட்டலாம் என்பது. அதனால்தான் பெரியார், அண்ணா ஆகியவர்களை இந்து மத எதிர்ப்பாளர்களாக, இந்திய ஒற்றுமைக்கு எதிரானவர்களாக சித்தரிக்கும் தேவை எழுகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதுடன், அவ்விதம் செய்தால் அது கூட்டணி கட்சியான அ.இ.அ.தி.மு.க-வை பாதிக்கும் என்ற பிரச்சினையையும் பாஜக எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அதனால் தெளிவான ஒரு அரசியல் செயல்திட்ட த்தை வகுக்க முடியாத தால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி கூட்டணியின் வெற்றி வாய்ப்பையே தொடர்ந்து குறைத்து வருகிறது. Madurai Murugn Manadu

இந்து முன்னணி அமைப்பாளர்களில் (கார்யகர்த்தா) ஒருவரான கனிமொழி என்பவர் பேசும்போது பார்வையாளர்களை “ரத்தத்தின் ரத்தமான காவி உடன்பிறப்புக்களே” என்று அழைத்தார். ஆனால் தமிழ்நாட்டை மீடகவேண்டும் என்னும்போது, எழுபதாண்டுகால திராவிட இயக்க ஆட்சி என்று தி.மு.க, அ.இஅ.தி.மு.க இரண்டையும் சேர்த்துத்தான் பேசினார். மேடையில் அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் ஆர்.வி.உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டவர்களை வைத்துக்கொண்டே இப்படி திராவிட இயக்கத்தை பொதுமைப்படுத்தி எதிர்ப்பதை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.

அடுத்த பிரச்சினை அண்ணாமலைக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம். எடப்பாடி கூறியதால் கண்துடைப்பாக அவரை அகற்றி நயினார் நாகேந்திரனுக்கு பதவி கொடுத்தாலும், அண்ணாமலையின் முக்கியத்துவம் சிறிதும் குறையவில்லை என்பது இந்த நிகழ்வில் தெளிவாகியது. முக்கிய விருந்தினரான பவன் கல்யாணுக்கு அருகில் அண்ணாமலை வீற்றிருக்க, நயினார் நாகேந்திரன் ஓரத்தில் வீற்றிருந்தார். பேச்சாளர் வரிசையிலும் அண்ணாமலையே சிறப்பு விருந்தினருக்கு முன்பாகப் பேசினார். அ.இ.அ.தி.மு.க தெரிந்தேதான் இந்த கண் துடைப்பு தலைவர் மாற்றத்தை அங்கீகரிக்கிறதா என்பது பரிசீலனைக்குரியது. ஆனால் எந்த நேரமும் கூட்டணி முறிந்தால் மீண்டும் அண்ணாமலை முன்னணிக்கு வருவார் என்பதில் ஐயமில்லை. இப்போதே அப்படித்தான் அறிகுறிகள் தெரிகின்றன. Madurai Murugn Manadu

இந்த கூட்டணியின் பிரச்சினையே என்னவென்றால் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லாதபோது எதற்கு முக்கியத்துவம் தருவது என்பதுதான். அ.இ.அ.தி.மு.க-விற்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தால் பாஜக பத்து தொகுதிகள் கூட வாங்கிக்கொண்டு அடக்கமாக இருக்கும். ஆனால் வெல்வதற்கு வாய்ப்பு இல்லை என்னும்போது அ.இ.அ.தி.மு.க இன்னம் அதிக தொகுதிகளை நமக்குக் கொடுத்தால் என்ன, நாம் தனியாக போட்டியிட்டால் என்ன என்ற எண்ணம் நிலவத்தான் செய்யும். அ.இ.அ.தி.மு.க பிரச்சினையும் அதுதான். பாஜக-விற்கு அதிக தொகுதிகள் கொடுத்தால் வெல்ல முடியும் என்றால் விருப்பத்துடன் கொடுத்துவிடுவார்கள். ஆனால் வெல்ல முடியாது என்னும்போது அதிக தொகுதிகளைக் கொடுத்து தங்கள் நிலையை மேலும் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா என்ற நியாயமான குழப்பம் நிலவத்தான் செய்யும்.

அதேதான் கூட்டணி ஆட்சி பிரச்சினையிலும். வெற்றி பெறும் வாய்ப்பிருந்தால் அ.இ.அ.தி.மு.க தாராளமாக கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டுவிடும். பிரச்சினையே அப்படி ஒப்புக் கொண்டால் அதைச்சொல்லியே தி.மு.க கூட்டணி பெருவெற்றி பெற்றுவிடும் என்பதுதான். பாஜக-விற்கோ வெல்லத்தான் போவதில்லை; கூட்டணி ஆட்சி என்று சொன்னால்தான் என்ன என்ற கேள்வி.

இந்த குழப்பங்களுக்கு இடையேதான் முருக பக்த மாநாடு பிரச்சினைகளை கூர்மைப்படுத்தியுள்ளது. இறுதியாகப் பேசிய பவன் கல்யாண்தான் முத்தாய்ப்பாக பேசினார். அவர் அ.இ.அ.தி.மு.க நிறுவனரையே வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்தி விட்டார். கடவுளான முருகன்தான் புரட்சித் தலைவர் என்று முழுங்கினார். அதற்கு ஏதேதோ விளக்கமும் சொன்னார். இது புரட்சித் தலைவர் என்றால் எம்.ஜி.ஆர் என்ற அடையாளத்திற்கே வேட்டுவைக்கும் செயல் என்று அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க முடியாது. ஒரு தெலுங்கு நடிகரை வைத்து தமிழ்நாட்டில் ஆதரவு திரட்டலாம் என்று பாஜக நினைப்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை. அதற்கும் மேல் அவர் எம்.ஜி.ஆரின் தனிப்பெரும் அடையாளமான புரட்சித் தலைவர் என்ற பட்டத்தையே பறித்து முருகனுக்கு வழங்குவதை என்ன சொல்வது என்று தெரியவில்லை. Madurai Murugn Manadu

மொத்தத்தில் தமிழ்நாட்டு அரசியலில் என்ன செய்வது என்று தெரியாத குழப்பத்தில் பாஜக மேலும், மேலும் அபத்தமான தவறுகளைச் செய்வதையும், அதில் அ.இ.அ.தி.மு.க-வும் சிக்கிக் கொண்டு விழிப்பதையும்தான் காண முடிகிறது. இதில் இரண்டு பேருக்குமே விஜய் மீதும் ஒரு கண்; தமிழ்நாட்டு அரசியலில் சுவாரசியத்திற்கும், நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது என்றுதான் தோன்றுகிறது. தி.மு.க, இந்தியா கூட்டணி ஆதரவாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு.

கட்டுரையாளர் குறிப்பு:      

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share