இந்து முன்னணி சார்பில் மதுரையில் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்தநிலையில், முருகனின் உண்மையான பக்தர்கள் பாஜகவின் சதியை புரிந்து கொண்டு இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் இன்று (ஜூன் 8) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மதுரையில் ஜூன் 22 நடக்கவிருப்பது ஆன்மீக மாநாடல்ல, பாஜகவின் அரசியல் மாநாடு. மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பாஜக தனது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது.
அதனால்தான் பாஜகவின் அகில இந்திய தலைவர் முதல் உள்ளூர் தலைவர்கள் வரை இம்மாநாட்டிற்கு மக்களை திரட்டும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
வடஇந்தியாவில் ராமர் கோவில் என்ற பெயரில் கலவரத்தை உருவாக்கி ஆட்சியதிகாரத்தை கைப்பற்றினர்.
தமிழ்நாட்டில் முருகனை முன்னிறுத்தி கலவர பூமியாக்கி ஆட்சியைக் கைப்பற்ற கனவு காண்கின்றனர். CPIM Shanmugam Attack Speech about Murugan Maanadu
முருகனின் உண்மையான பக்தர்கள் பாஜகவின் சதியை புரிந்து கொண்டு இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். CPIM Shanmugam Attack Speech about Murugan Maanadu
