தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சவாரி செய்வதற்கான குதிரையாக வசமாக சிக்கி இருக்கிறது அதிமுக. தமிழ்நாட்டில் பாஜகவின் செல்வாக்கு என்ன என்பது நாடறிந்த ஒன்று. அண்ணா திமுகவோ சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி. BJP ADMK Alliance
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திமுக, பாஜகவை கூட்டணியில் சேர்க்கவில்லை; ஆனால் பாஜகதான் அண்ணா திமுகவை தமது கூட்டணிக்குள் இழுத்து கொண்டு வந்திருக்கிறது. இது அண்ணா திமுகவின் பலவீனமான தலைமையை பகிரங்கமாகவே வெளிப்படுத்தி நிற்கிறது. BJP ADMK Alliance
தமிழ்நாட்டில் பாஜகவின் இந்த சித்து விளையாட்டுகள், அப்படியே பீகார் மாநில அரசியலில் பாஜக ஆடிய பரமபத விளையாட்டுகளை ஒவ்வொரு நகர்விலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் நடைபெறும். BJP ADMK Alliance
பீகார் மாநிலத்தில் 2015-ம் ஆண்டு அரசியல் கட்சிகள் நிலவரம் என்னவாக இருந்தது? BJP ADMK Alliance
பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2015-ம் ஆண்டு “Mahagathbandhan” என்ற பெயரில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைத்தன லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ். 2015-ம் ஆண்டு தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் 101; ஐக்கிய ஜனதா தளம் 101; காங்கிரஸ் 47 தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டு தேர்தலை சந்தித்தன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, ஜிதன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி ஆவா மோர்ச்சா இடம் பெற்றன. பாஜக 157, லோக் ஜனசக்தி 42, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 23, ஆவா மோர்ச்சா 21 தொகுதிகளைப் பகிர்ந்து கொண்டன.

2015-ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:
101 இடங்களில் போட்டியிட்ட லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 80; 101 இடங்களில் போட்டியிட்ட நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் 71;காங்கிரஸ் 27 இடங்களில் வென்றன.
157 இடங்களில் போட்டியிட்ட பாஜக 53, அதன் கூட்டணி கட்சிகள் அனைத்தும் மொத்தம் 5 இடங்களில் வென்றன. இதனையடுத்து லாலு+நிதிஷ்+ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி, நிதிஷ்குமார் தலைமையில் அமைந்தது. BJP ADMK Alliance
ஆனால் 2 ஆண்டுகளில், Mahagathbandhan கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. இதனால் ஐக்கிய ஜனதா தளம்+பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. அப்போதும் நிதிஷ்குமார்தான் முதல்வர். BJP ADMK Alliance

இதனையடுத்துதான் பீகார்2020-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல். இந்தத் தேர்தல் களத்தில் பாஜக என்பது ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு அடுத்த 3-வது இடத்தில்தான் இருந்தது. ஆனால் 2020-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடியும் போது பாஜக, 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துவிட்டது; அதிக இடங்களைப் பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை விட ஒரே ஒரு சீட் குறைவாகத்தான் பெற்றது பாஜக. ஆனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ முந்தைய தேர்தலைவிட 28 தொகுதிகள் குறைவாக வெறும் 43 இடங்களில் 3-வது கட்சி என்ற இடத்துக்கு தள்ளப்பட்டுவிட்டது. இதற்கு காரணமே சாட்சாத், ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான பாஜகதான். BJP ADMK Alliance
2020-ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலின் போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கெத்தாக நீடித்தது. அந்த தேர்தலில் பாஜக அணியில், ஐக்கிய ஜனதா தளம்- விகாஷீல் இசான் கட்சி, இந்துஸ்தானி ஆவாமி மோர்ச்சா இடம் பெற்றன. BJP ADMK Alliance
அத்துடன் பாஜக அதிரிபுதிரியாக நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கு 115 இடங்களையும் அந்த கட்சி 110 இடங்களையும் பகிர்ந்து கொண்டன. இவ்வளவு தாராள மனதைக் காட்டிய பாஜக, தமது கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு குழியையும் தோண்டி வைத்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்ற மற்றொரு கட்சியான லோக்ஜனசக்திக்கு எந்த ஒரு தொகுதியையும் பாஜக ஒதுக்கவில்லை. இதனால் அந்த கட்சி 134 இடங்களில் போட்டியிட்டது. BJP ADMK Alliance
லோக்ஜனசக்தி, பாஜகவுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாமல், பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியது. இப்படி 134 தொகுதிகளில் போட்டியிடும் அளவுக்கு லோக் ஜனசக்தி வலிமையும் இல்லை. ஆனால் பாஜகவில் சீட் கிடைக்காத பல மாஜிக்கள், லோக் ஜனசக்தி என்ற பெயரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர். இதனை பாஜக கண்டிக்க மறுத்தது; சக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் எவ்வளவோ கதறிப் பார்த்தும் பாஜக கண்டுகொள்ளாமல், கடந்து சென்றது.

இதன்விளைவுதான் 2020-ம் ஆண்டு பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக 74 இடங்களில் வென்று 2-வது பெரிய கட்சியானது; ஐக்கிய ஜனதா தளம் கட்சியோ வெறும் 43 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று 3-வது கட்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் பாஜகவுடன் கை கோர்த்திருக்கும் அதிமுகவின் நிலைமையும் பீகார் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போல ஆகிவிடக் கூடும் என்பதற்கான அத்தனை களச் சூழலும் கச்சிதமாகவே இருக்கின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இடம் பெற்றுள்ளது. ஆனால் அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்கக் கூடிய டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணியும் பாஜக கூட்டணியில்தான் இருக்கின்றன. சக கூட்டணி கட்சியான அதிமுகவின் செல்வாக்கை சிதைத்துவிடுவதற்கும் அந்த இடத்தை நோக்கி தம்மை நகர்த்திக் கொள்ளவும் பீகார் பாணியில் பாஜகவின் தமிழ்நாட்டு லோக் ஜனசக்தி கட்சியாக இருக்கவே இருக்கின்றன டிடிவி தினகரனின் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி.
அதிமுகவுக்கு எதிராக டிடிவி தினகரனின் அமமுக, ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை களமிறக்கினால் அதிமுக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளின் எண்ணிக்கை மேலும் குறையக் கூடும். இதனை பாஜக ரசிக்கத்தான் செய்யுமே தவிர, அதிமுகவுக்கு கிஞ்சித்தும் பரிதாப்படாது; அப்போதும் கூட, இது அதிமுக உட்கட்சி விவகாரம்; கூட்டணியில் அதிமுக இணையும் போது, அந்த கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடமாட்டோம் என ஏற்கனவே அமித்ஷாவே சொல்லிவிட்டார் என நழுவித்தான் வேடிக்கை பார்க்கும் பாஜக.
தற்போதைய நிலையில் பாஜகவின் பிடியில் வசமாக சிக்கிக் கொண்ட அதிமுக, உள்ளதும் போனதய்யா கதையாக தமது இருப்பை மேலும் மேலும் சரித்துக் கொள்ளக் கூடிய அபாயச் சுழலில் சிக்கி இருக்கிறது.. இதனைத்தான் பாஜகவின் பீகார் வியூகங்கள் தெள்ளத் தெளிவாகவே சுட்டிக்காட்டுகின்றன. அய்யோ பாவம் அதிமுக என்பதா? அடேங்கப்பா படுபாதக பாஜக என்பதா?!