பீகார் 2-வது கட்ட தேர்தல்: 122 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடக்கம்

Published On:

| By Mathi

Bihar 2nd Phase Election

பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலில் 2-வது கட்டமாக 122 தொகுதிகளில் இன்று (நவம்பர் 11) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. டெல்லி குண்டு வெடிப்பைத் தொடர்ந்து பீகாரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 121 தொகுதிகளில் முதல் கட்டமாக கடந்த 6-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 65.08% வாக்குகள் பதிவாகி இருந்தன.

ADVERTISEMENT

இதனையடுத்து 122 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது. இந்த தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். 3.70 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 45,399 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 14-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகினர்; 24 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெறும் பீகாரில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share