கோடை தொடங்கிவிட்டது. குளிர்காலத்தில் தயிரைத் தவிர்த்தவர்களும் இந்தக் கோடையில் தயிரைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள்.வெயிலுக்கு இதமளிக்கும் இந்த தயிர், வயிற்றுக்கு மட்டுமல்ல… Benifits of curd for hair
தலைமுடிக்கும் இதமளிக்கும்.தயிரைத் தலையில் பூசி ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு நீங்கும். முடியில் பளபளப்பு கூடும்.மூன்று டேபிள்ஸ்பூன் தயிர், இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய், நான்கு டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் கலந்து தலையில் தடவி, அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி பஞ்சு மாதிரி மென்மையாக இருக்கும்.அரை கப் தயிருடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பாதாம் எண்ணெய், இரண்டு முட்டையை நன்கு அடித்துச் சேர்த்துத் தலையில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் முடி பொலிவாக இருக்கும்.
ஒரு கப் தயிருடன், சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்துத் தலையில் பூசி, 15 நிமிடங்கள் ஊற வைத்துக் குளித்தால் முடியின் வேர்க்கால்கள் பலப்படும் என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்