“இன்ஜினியரிங் முடிச்சுட்டு ஐடி கம்பெனிக்குப் போகப் பிடிக்கலையா? நம்ம படிச்ச படிப்புக்கு (Core Job) அரசுத்துறையில வேலை கிடைச்சா எவ்ளோ நல்லா இருக்கும்!” என்று ஏங்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு, மத்திய அரசின் நவரத்னா நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரிக்கும் பிஇஎல் (BEL) நிறுவனத்தில், காலியாக உள்ள 99 ‘டிரெய்னி இன்ஜினியர்’ (Trainee Engineer – I) பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- பணி: டிரெய்னி இன்ஜினியர் – I (Trainee Engineer-I).
- காலியிடங்கள்: மொத்தம் 99 இடங்கள்.
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E / B.Tech (Electronics, Mechanical, Computer Science, Electrical) முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (OBC-க்கு 3 ஆண்டுகள், SC/ST-க்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வு உண்டு).
சம்பளம் எவ்வளவு? இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான பணி (Contract Basis) என்றாலும், சம்பளம் குறைவில்லாமல் கிடைக்கும்.
- முதல் வருடம்: ரூ.30,000/-
- இரண்டாம் வருடம்: ரூ.35,000/-
- மூன்றாம் வருடம்: ரூ.40,000/-
- இதுபோக, ஆண்டுதோறும் ரூ.12,000 அலவன்ஸ் (Allowance) மற்றும் மருத்துவக் காப்பீடு வசதிகளும் உண்டு.
தேர்வு முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் நேர்காணல் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கேட் (GATE) மதிப்பெண் தேவையில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சி!
விண்ணப்பிப்பது எப்படி? விருப்பமுள்ளவர்கள் www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் உண்டு (ரூ.177 வரை இருக்கலாம்). SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை.
என்னதான் இது 3 வருஷ கான்ட்ராக்ட் வேலைன்னாலும், ‘பிஇஎல்’ (BEL) நிறுவனத்துல வேலை பார்த்தா அந்த அனுபவச் சான்றிதழுக்கு (Experience Certificate) வெளியில செம மவுசு இருக்கு பாஸ். குறிப்பா, கேட் எக்ஸாம் எழுதாமலேயே ஒரு மத்திய அரசு நிறுவனத்துல நுழைய இது ஒரு நல்ல என்ட்ரி டிக்கெட். ஃப்ரெஷர்ஸ் (Freshers) சும்மா வீட்ல இருக்காம, இந்த எக்ஸாமுக்கு அப்ளை பண்ணுங்க. ஃியூச்சர்ல நிரந்தர வேலைக்கான அறிவிப்பு வரும்போது, இந்த அனுபவம் உங்களுக்குக் கைகொடுக்கும்!
