ADVERTISEMENT

பீலா வெங்கடேஷ் ஐஏஎஸ் காலமானார்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்.

கொரோனா பரவல் சமயத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த வந்தவர் பீலா வெங்கடேஷ். அப்போது பீலா வெங்கடேசனின் பணி, தினசரி அவர் அளித்த பேட்டி ஆகியவை மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தநிலையில் 2023ஆம் ஆண்டு எரிசக்தித் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.

ADVERTISEMENT

இவரது கணவராக இருந்த முன்னாள் காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பாலியல் வழக்கில் சிக்கினார். இவருக்கு 3ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பீலா ராஜேஷ் என்ற தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றிக்கொண்டார்.

ADVERTISEMENT

இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் சென்னையில் இன்று (செப்டம்பர் 24)காலமானார்.

1997 முதல் தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பீலா வெங்கடேசன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share