கே.பாலச்சந்தர் 1979-ம் ஆண்டு தெலுங்கில் இயக்கிய படம் மரோசரித்ரா. கமல்ஹாசன் சரிதா நடிப்பில் வெளியான இந்த படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.
என் 25 வருட சினிமா அனுபவத்தில் முதல் முறையாக நன்றாக இல்லை என்று நான் சொன்ன படம் என்னையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வெற்றி பெற்றுள்ளது என்று ஒரு விநியோகஸ்தரை புலம்ப வைத்தது கமல்ஹாசன் – கே.பாலச்சந்தர் கூட்டணி.
இந்தப் படத்தை ‘ஏக் துஜே கே லியே’ என்ற பெயரில் இந்தியில் கே.பாலச்சந்தரே இயக்கினார். கமல்ஹாசன் நாயகனாகவும் , ரதி அக்னிஹோத்ரி நாயகியாகவும் நடித்தனர்.
தெலுங்கு சினிமாவின் கிளைமாக்சில் நாயகி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்படுவார். ஆனால் இந்தியில் கொலை மட்டுமே போதும் என்று தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத் சொன்னதால் கே.பாலச்சந்தரும் அப்படியே படமாக்கினார்.
ஆனால் படம் முடிந்து முழு படத்தையும் பார்த்த எல்.வி.பிரசாத், ”ரேப் இல்லாமல் படம் முழுமையான இருக்காதே” என்று கூறியுள்ளார். எனவே அது எடுக்கப்பட்டது. படம் வெளியாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்த சில வாரங்களில் து அமிதாப் பச்சன் படம் ஒன்று வெளியானது.
அமிதாப் படம் ஏக் துஜே கே லியே படத்திற்கு தடையாக இருக்கும் என்று எல்லோரும் நினைத்தபோதும், அமிதாப் படத்தை விட இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தது.
படத்தை பார்த்த அன்றைய பாலிவுட் ஸ்டார் ராஜ்கபூர் கூட,, ” படம் சூப்பர்.கடைசியில் இந்த ரேப் எதற்காக” என்று கேட்டுள்ளார். ஆனால், கே.பாலச்சந்தர். ” அவரின் கேள்வி தான் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும்” என்றார். ரேப் சீன் முடிந்தவுடன், யாரும் வெளியில் செல்லாமல் கடைசிவரை வரை அதிர்ச்சியோடு படத்தை பார்த்தார்கள்
இந்தித் திரை உலகில் பல்லாண்டு காலம் சாதித்த பலரும் “இந்த படம் ஓடாது” என்று உறுதியாக நம்பிய நிலையில், எல்லோரின் நினைப்பையும் பொய்யாக்கியது ஏக் துஜே கேலியே .
— ராஜ திருமகன்
