இன்னிக்கு ஈவ்னிங் விஜய்யின் கடைசி படத்துல இருந்து ‘தளபதி கச்சேரி’ சிங்கிள் வெளியாச்சு…
எங்க அண்ணன் ரிப்பிட் மோடுல தளபதி கச்சேரி பாட்ட பாத்துக்கிட்டு இருந்தான்…
எங்கம்மா எல்லா வேலையும் முடிச்சிட்டு சீரியல் பாக்க வந்து உட்கார்ந்தாங்க… விஜய் டிவி வைடா சீரியல் பாக்கனும்னு அம்மா சொல்ல… இரும்மா இன்னொரு முறை பாத்துகிறேனு ரிப்பிட் மோடுல மறுபடி பாத்துட்டே இருந்தான்…
இதனால கடுப்பான மம்மி… அவங்க ஆயுதத்தை எடுத்து வெளு வெளுனு வெளுத்தாச்சு…
ஆகா… தளபதி கச்சேரியவிட அண்ணன் அடி வாங்குற கச்சேரி சூப்பாரா இருக்கே… நம்ம மேல அடி விழுறதுக்குள்ள இடத்த காலி பன்னிடுவோம்…
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

Mannar & company
வறுமையின் நிறம் மட்டுமல்ல
விடுமுறையின் நிறமும் சிவப்புதான்.
சரியான்னு காலண்டரில் பார்த்து தெரிஞ்சிக்கோங்க!

balebalu
பீகார் எம்.பி.யின் இரு கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான மை – செய்தி
இவங்க அடிக்கிற கூத்துக்கு இன்னும் நாலு செயற்கை கை மாட்டி
கள்ள ஒட்டு போட்டாலும் போடுவாங்க

Writer SJB
ஒரு அறிவாளி ராஜாவானால் அந்த நாடு நூலகமாக மாறுகிறது ஒரு கோமாளி ராஜாவானால் அந்த நாடு சர்க்கஸ் கூடாரமாக மாறுகிறது..!

mohanram.ko
என்னடா இது ,யூ ட்யூபர ஹாஸ்பிடல்ல வேலைக்கு வச்சி இருக்க….
அவரு தான் கரெக்டா ஹயிட், வெயிட் கேட்பாரு…

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
இன்டர்வியூக்கு வர சொல்லி, அவனுக கம்பெனில உள்ள தீர்க்க முடியாத பிரச்சனைகளுக்கு எல்லாம் ஓசிலயே சொல்யூசன் கண்டுபுடிக்க டிரை பண்றானுக..

iQKUBAL
ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணியே.. என்ன கத்துக்கிட்ட?
இனிமேல் ஸ்டாக் மார்க்கெட்ல இன்வெஸ்ட் பண்ணக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்..

ArulrajArun
நாம எதிர்பார்க்கிற ஆடம்பர வாழ்க்கையே நம்முடைய வாழ்க்கையில் நம்மை பம்பரம் போல் சுற்ற வைக்கிறது …

Mannar & company
தொப்பையை குறைச்சு வாழ்கிறவனைவிட,
தொப்பையை மறைச்சு
வாழ்கிறவன் அதிக சந்தோஷமாக இருப்பதாக வரலாறு கூறுகிறது!

Sasikumar J
எதில் நீ அதிகம் நேரம் செலவிடுகிறாயோ அதுதான் உனக்கு பலமும், பலவீனமும்…!

Writer SJB
இன்னும் ஆறு மாதத்தில் யார் உண்மையான ரவுடி என்று தெரியும்- லாட்டரி மருமகன்
கரூரில் பயந்து ஓடினதை பற்றி பேசுவோமா..?
படிக்காதவன்
வராத தூக்கத்தை வா வா’னு இழுத்து கொஞ்ச நேரம் தூங்கலாம்னு தூங்கிட்டு இருக்கும்போதுதான்
ஓயாம ஃபோன் வந்து தூக்கத்தை கெடுக்கும்
ஏன்னா நம்ம டிசைன் அப்படி…

லாக் ஆஃப்
